பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 சங்க இலக்கியம்

மாகவான் கிகர்வண்கை மாநாய்கன்

-சிலம்பு. மங்கல வாழ்த்துக்காதை

கரையோர வாணிகம்

கொற்கை தொண்டி பூம்புகார் சோபட்டினம் முதலான தமிழ்நாட்டுத் துறைமுகப் பட்டினங்களினின்று நாவாய்களில் புறப்பட்டுச் சென்று தமிழ் வணிகர் கிழக்குக் கடல் ஒரமாகவே நாவாய்களைச் செலுத்தி நெல்லூர், கலிங்கப் பட்டினம், தம்ரலிப்தி (வங்காளத் துறைமுகம்) முதலான பட்டினங்கட்குச் சென்றனர். பிறகு கங்கையாறு கடலில் கலக்கின்ற புகர்முகத்தின் ஊடே கங்கையாற்றில் நுழைந்து கங்கைக் கரையில் இருந்த பாடலிபுரம், காசி முதலான

ஊர்களில் வணிகம் செய்து திரும்பினர்.

கங்கை வங்கம் போகுவர் கொல்லோ

-நற்றிணை. 189:5

கி.மு. 4ஆம் நூற்றாண்டில் மகத நாட்டை அரசாண்ட நந்த அரசர் தங்களுடைய தலைநகரமான பாடலிபுத்திரத்தில் கங்கையாற்றின் கீழே பெருஞ்செல்வத்தைப் புதைத்து வைத்திருந்ததைத் தமிழக வணிகரின் மூலமாகத் தமிழ்நாட்ட வர் அக்காலத்தில் அறிந்திருந்தனர்.

பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்

சீர்மிகு பாடலிக் குழிஇக் கங்கை

நீர்முதற் கரந்த கிதியங் கொல்லோ

-அகம். 265:4-6

என்னும் இப் பாடலில் நந்த அரசரின் செல்வப் புதையலைப் பேசுகின்றார். தமிழ் வணிகர் கலிங்கநாட்டிலே போய் வாணிகம் செய்தனர். அந்த வணிகச் சாத்து கி.மு. 300 - 150 வரையில் தங்கியிருந்தது. நாளுக்கு நாள் தமிழ் வணிகரின் செல்வாக்கு வளம்பெறுவதைக் கண்ட கலிங்க