பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 157

வேந்தன் காரவேலன் தன்னுடைய ஆட்சிக்குத் தமிழ் வணிகர்களால் ஆபத்து ஏற்படுமோ என்றஞ்சி அந்த வணிகச் சாத்தினை அழித்தான் என்று அவனது ஹத்தி கும்பா குகைக் கல்வெட்டு எழுத்துச் சாசனம் அறிவிக்கின்றது.

கலிங்கத்திலிருந்து தமிழகத்திற்குக் கொண்டு வரப் பட்ட முக்கியப்பொருள் பருத்தித்துணி. கலிங்கத்தினின்று வந்தமையால் காலப்போக்கில் கலிங்கம்’ என்ற சொல்லே ஆடையைக் குறித்து நிற்கும் பொதுச்சொல்லாயிற்று. கலிங்க நாட்டினின்று தமிழகத்திற்கு வந்த மற்றொரு பொருள் சந்தனக்கல். (வடவர் தந்த வான் கேழ் வட்டம்.)

அடுத்து ஆந்திர நாட்டிலே பெயர்போன அமராவதி நகரத்திலும் தமிழ்வணிகரின் ஆட்சி நடைபெற்றிருக்கின்றது. அமராவதி நகரில் உள்ள பெளத்தத்துரபி (கி.மு. 200 முதல் கி.பி. 200) யினைக் கட்டத் தமிழ் வணிகர்களும் (தமிள (தமிழ்) கண்ணன், இளங்கண்ணன், இவர்களின் தங்கை, நாகை), உதவி செய்துள்ளனர் என்ற செய்தியினை 3: உயரமும் 2அடி 8 அகலமும் உள்ள ஒரு கல்லில் பிராமி எழுத்தில் எழுதப்பட்ட சாசனம் தருகின்றது.

இலங்கையிலும் தமிழ்வணிகர் வணிகம் செய்து மேன்மை பெற்றுள்ளனர். தமிழ் வணிகச் சாத்து கி.மு. 2 இல் இலங்கைக்குச் சென்று வணிகம் செய்ததை அங்குள்ள ஒரு பிராமி எழுத்துக் கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது.

இன்றைக்கு 2200 ஆண்டுகட்கு முன்பு தமிழ் வணிகச் சாத்தனுடைய மாளிகை கட்டப்பட்டுப் பிற்காலத்தில் மண் மூடிக் கிடந்திருத்தல் வேண்டும். பின் மழைநீரினால் மண்மேடு கரைந்து அங்குக் கல்லில் எழுதப்பட்ட பிராமி எழுத்துக்கள் வெளிப்பட்டன. இதில் கற்பாறையோடு சார்ந் திருந்த மாளிகையில் அக்காலத்தில் தமிழ் நாவாய்த் தலைவன் அமர்ந்திருந்த இடத்திலும் மற்ற வணிகர்கள் அமர்ந்திருந்த இடங்களிலும் அவர்களுடைய பெயர்கள்