பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 சங்க இலக்கியம்

பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றினின்று கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே தமிழ்வாணிகர் அநுராதபுரத்தில் பெரிய வணிக நிலையம் அமைத்திருந்தமை தெளிவாகிறது.

கி.மு. ஒன்று, இரண்டாம் நூற்றாண்டுகளில் இலங்கை யில் வேறு சில தமிழ் வணிகர் இருந்ததை அக்காலத்துப் பிராமிய எழுத்துச் சாசனங்கள் கூறுகின்றன.

தமிழ்நாட்டு வணிகர் இலங்கைக்குச் சென்று வாணிகஞ் செய்ததைச் சங்க இலக்கியங்கள் கூறவில்லை. ஆனால் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் தமிழ்வணிகர் இருவர் இலங்கை யை அரசாண்டதை மகாவம்சமும் தீபவம்சமும் கூறுகின்றன. அதாவது சேனன் குட்டகன்’ என்னும் இருவரும் அற்றை நாள் இலங்கை மன்னன் சூரதிஸ்ஸன் என்னும் சிங்கள அரசனை வென்றதைச் செப்புகின்றது. இவ்விருவரும் அஸ்ஸா நாவிகள் - குதிரை வணிகர் எனப்பட்டனர்.

நடுக்கடல் வாணிகம்

தமிழகத்துக்குக் கிழக்கே பசிபிக் மாக்கடலில் காணப் படும் இற்றை நாளில் கிழக்கிந்தியத் தீவுகள் என்றும் ‘இந்தோனேஷியத்தீவுகள்’ என்றும் வழங்கப்படும் அற்றை. நாள் சாவக நாட்டோடும் தமிழர் கடல்வழி வாணிகம் செய்துளர்.

சாவக நாடு - சாவா தீவு (இன்றியமையாதது) சாவா - யவதீபம் - வடகாட்டார் சாவா - யெதீயவோ - சீனர்

இந்தியாவிற்கும் சீன தேசத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்த இச்சாவக நாடு அக் காலத்தில் புகழ்பெற்ற வணிக மத்திய இடமாக இருந்தது.

தமிழகத்தின் சேரநாட்டு மிளகை யவனர் கப்பலில் எடுத்துச்சென்று உரோமாபுரி முதலான மேல்நாடுகளில்