பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 159

விற்றனர். எனவே சேரநாட்டு மிளகு போதுமான அளவு தமிழகத்திற்குக் கிடைக்கவில்லை. எனவே பற்றாக்

குறையை நிறைப்படுத்தச் சாவகத்து மிளகு தமிழகத்திற்குத் தருவிக்கப்பட்டது.

தமிழகத்துக் கப்பல் வணிகர் சாவக நாட்டுக்குக் கடல் கடந்து சென்று அங்கு உண்டான வாசனைப் பொருட் களான சந்தனம், சாதிக்காய், கற்பூரம், பிசின், இலவங்கம் முதலியனவற்றையும், பவழமும் சீனத்திலிருந்து அங்குக் கொணரப்பட்ட பட்டுத்துகிலையும் கொணர்ந்து பழந்தமிழ் நாட்டில் விற்றனர். சாவகத்தில் கிடைத்த வாசனைப் பொருட்களைச் சிலப்பதிகாரம் செப்புகின்றது.

தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம் கற்பூரம் சாதியோ டைந்து -சிலம்பு

தமிழ்நாட்டினின்று சாவக நாட்டிற்குச் சென்ற கப்பல்கள் முதலில் இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் சம்புகொல பட்டினத்துச் சென்று தங்கின. பின் அங்கிருந்து சாவகத்திற்குச் சென்றன. இடையில் நாகர்மலைத் தீவுகள் இருந்தன. இங்கு வாழ்ந்த நாகர்கள் (நக்கசாரணர்) நாகர்மலைத் தீவிற்குக் கப்பற் பயணிகள் சென்றால் கொன்று தின்றுவிடுவர். சாதுவன் என்னும் வணிகன் மட்டும் இவர்களிடமிருந்து தப்பியவன் என்ற செய்தியை மணிமேகலை தருகின்றது.

கடலில் செல்லும் கப்பல்கள் காற்றினால் திசைமாறிச் செல்லும்போது பரதவர் அவைகளை அடக்கினர் என்பதை,

முரசு கடிப்படைய அருந்துறை போகிப் பெருங்கடல் நீந்திய மரம் உலி யுறுக்குப் பண்ணிய வினைவர் போல

என்னும் பதிற்றுப்பத்து அடிகள் வலியுறுத்துகின்றன.