பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 16.1

இவ்வாறாகக் காற்றினாலும், மழையினாலும், புயலினாலும் இடுக்கண்கள் நேர்ந்தபோதும் அஞ்சாமையுடன் கடலில் நாவாய்களைச் செலுத்தி வணிகம் செய்தனர். இவ்வியற் பகையே அன்றிக் கப்பற் கொள்ளைக்காரர்களாலும் இன்னல் கள் நேர்ந்தன.

கடலில் நாவாய் ஒட்டும் தொழில் செய்பவருக்கு மீகாமர் என்பது பெயர். கப்பலோட்டும் தொழில் செய்தவர் பரதவர் என்றும் பரதர் என்றும் பெயர் பெற்றனர்.

துறைமுகங்களில் கள் விற்கப்பட்டமையும், அக் கள்ளினை வாங்கிக் குடித்து மாலுமிகள் மகிழ்ச்சியாக இருந்தமையையும் சங்க இலக்கியங்கள் உணர்த்தி நிற்கின்றன.

வேறுபன் னாட்டுக் கால்தர வந்த வல்வினை நாவாய் தோன்றும் பெருந்துறைக் களிமடைக் கள்ளின் சாடி

-நற்றிணை 298

முழங்குநீர் முன்றுறைக் கலம்புனர் கம்மியர்

துழந்தடு கள்ளின் தோப்பியுண் டயர்ந்து

பழஞ்செருக் குற்ற அனந்தர்ப் பாணி

-மணி. 7. 70-72

நாவாய்க் கப்பல்களை மகிழ்வுடன் எதிர்கொண்டழைத் ததைப் பரிபாடல் நவில்கின்றது.

தாம் வேண்டும் பட்டினம் எய்திக் கரைசேரும் ஏயறு நாவாய் வரவெதிர் கொள்வார் போல

-பரிபாடல் 10. 38.39

துன்பங்கள் மிகுந்த நிலையிலும் திரைகடல் ஒடித் திரவியம் தேடிய வணிகர்களுள் பெரும்பொருள் ஈட்டிய