பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 163

நாடுகளினின்று கப்பலோட்டி வந்த வேறு மொழி பேசிய மக்கள் தங்கியிருந்ததைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

1. அரபு வணிகர்

தமிழ்நாட்டிற்கு வடமேற்கிலிருந்து வந்த அராபியர் சேரநாட்டின் முசிறித் துறைமுகத்தில் வந்து தங்கினர். வாணிகம் செய்தனர். முசிறியில் இவர்கள் செய்த வணிகப் பகுதிக்குப் பந்தர் என்று பெயர்.

நன்கல வெறுக்கைத் துஞ்சும் பந்தர்

-பதிற். 6ஆம் பத்து

பந்தர்ப் பயந்த பல்புகழ் முத்தம்

-8ஆம் பத்து

பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்

-7ஆம் பத்து

தமிழ் நாட்டோடு தொடர்பு கொண்டமையின் அரிசி என்னும் தமிழ்ச்சொல்;அரபி மொழியில் ஒருஜ் என்றழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டுச் சேரநாட்டு மூங்கிலைக் கொண்டு சென்று அரபி நாட்டில் வளர்த்தனர்.

தமிழ்நாட்டு மிளகைக் (சேரநாடு) கொண்டு போய்ச் செங்கடல் துறைமுகங்களிலும் எகிப்து நாட்டில் நீலநதி கடலில் கலக்கும் இடத்திலிருந்து அலெக்சாந்தி ரியத் துறைமுகப் பட்டினத்திலும் விற்றனர்.

தமிழர் கிழக்கிந்தியத்தீவுகளினின்று கொண்டு வந்த பொருள்களை அரபியர் வாங்கிச் சென்று வெளி நாடுகளில் விற்றனர்.