பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 18

இந்து சமுத்திரத்தினுாடே விளங்கிய .ெ ப. ரி ய கண்டத்தில் பல பகுதிகள் கடல்வாய்ப்படுதலும், அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் பல திசைகளை நாடிச் செல்வாராயினர், என அறிஞர் கருதுவர். திரு. ஜான் மார்ஷல் என்பவர் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து வெளி நாகரிகத்தினைத் திராவிட நாகரிகத்திற்கு இணை யானது என்று கூறுகின்றார். ஆரியர் வருவதற்குமுன் இந்தியா முழுதும் இருந்த பழைய மக்கள் பேசிய மொழியை யும் தமிழ் என்று கூறுவதைவிட வேறு பெயரால் வழங்குவது தகும் என்பது அறிஞர் கருத்து. மொகஞ்சதரோ நாகரிகத் தில் மக்கள் பேசிய அந்தப் பழைய மொழியைத் திராவிட மொழி என்று கூறாமல் பழந்திராவிட மொழி என்று கூறுவது பொருந்துவதாகக் கருதுகிறார் அறிஞர் ஹீராஸ்”.

- வடநூலார் தமிழரைத் திராவிடர் என்றும், ரோமர் தமிழகத்தை தமிரிலி என்றும் சீனர் தமிழகத்தைத் தெஹிமோலோ என்றும் குறிப்பிட்டனர்.

சங்க இலக்கியங்களில் தமிழகத்தின் எல்லை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனா அது உருகெழு குமரியின் தெற்கும் குணா.அது கரைபொரு தொடுகடல் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்

-புறம். 6:1.4

1. Being Dravidians, the inhabitants of Mohenjedaro and Northern India naturally spoke of a Dravidian language; yet this language was not of the Dravidian language now spoken in India, but probably their parent which may be called Proto–Dravidian.

–REV. H. HERAS Light on the Mohenjedaro Riddle, p.14,