பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 சங்க இலக்கியம்

என்னும் இலக்கியச் சான்றுகள் யவனரோடு தமிழர் கொண்ட வணிகப் பிணைப்பினைக் காட்டுகின்றது.

15. உரோம மன்னர் உயர்குடி ம க் க ள், பெண்மணிகள் ஆகியோர் ஆடை அணிகலன் அணிமணி இனப்பொருட்களுக்காகச் செலவு செய்த பொன்னால் உரோம உலகு வறுமையுற்றும் தமிழகம் வளமுற்றும் வந்ததைக் கண்டு பிளினி வருந்துகிறார். ஆண்டுதோறும் சீனா, தென்னாடு அரேபியா ஆகிய நாடுகட்கு உரோமர் வணிகத்திற்காக அனுப்பிய 1000 கோடி சென்டாசுகள் பாதி தென்னாட்டுக்குச் சென்ற தாக அவர் கணித்தார். இதற்கேற்ப ஏறக்குறைய எல்லாப் பேரரசர் கால நாணயங்களையும் புதை பொருள் ஆராய்ச்சியாளர் கண்டெடுத்துள்ளனர். உரோம நாட்டில் அடித்த நாணயங்கள் பாதிக்குமேல் தமிழகத்திலே வந்து நிலையாகத் தங்கிற்று என்பதை இது காட்டி நிற்கிறது.

தென்னிந்தியாவிற்கும் எ கி ப் து, மெசபடோமியா சுமேரியா, பாலத்தீனம் முதலிய நாடுகட்குமிடையே வாணிகத் தொடர்புகள் நெடுங்காலத்துக்கு முன்னமே தோன்றின.

16. எகிப்தோடு உள்ள வாணிகம் மிகப் பழமை யானது. தென்னிந்தியாவிலிருந்து மெல்லிய துணிவகை களும் கருங்காலிக் கட்டைகளும் எகிப்திற்குச் சென்றன. சேர நாடாகிய கேரளத்திலிருந்து இலவங்கம் சென்றதாக இருக்கலாம். கி.மு. 3000த்தில் தென்னாட்டு வணிகரே பாபிலோனுக்குத் தம் சரக்குகளை அனுப்பினர். செங் கடல் வாணிபத்தை அரபியர் தம் கைக்குள் வைத்திருந்ததனால் கி.மு. 2800 முதல் தென் னாட்டினர் எகிப்தியருக்கு வேண்டிய மிளகு, திப்பிலி, தேக்கு, குங்கிலியம், தானியங்கள், புலித்தோல், தந்தம்,