பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 169

பொன், ஆகிய சரக்குகளைக் கிழக்கு ஆப்பிரிக்காமூலம் அனுப்பினர்.

14. பாலத்தீனத்தைக் கி.மு. 8ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த சாலமனுக்கு 3 ஆண்டிற்கு ஒருமுறை பல அரிய பொருட்கள் பரிசுகளாகக் கப்பலில் அனுப்பப்பட்டு வந்தனவாம். தங்கம், வெள்ளி, குரங்குகள், மயில்கள், சந்தனக் கற்கள், வைரங்கள் முதலியன சாலமனுக்கு அனுப்பிய பொருட்களைச் சார்ந்தனவாம். அவற்றில் மயில்களும் சந்தனக் கட்டைகளும் தென்னிந்தியாவி லிருந்து சென்றிருக்க வேண்டும் என்பது திண்ணம். ஏனெனில் அவற்றைக் குறிக்க ஹீப்ரு மொழியில் வழங்கும் சொற்களாகிய துக்கிம், ஆல்மக் என்பன முறையே தமிழ்ச்சொற்களாகிய தோகை, அகில் என்ப வற்றிலிருந்து தோன்றியது என்பதற்கு ஐயமில்லை.

15. சுமேரியத் தலைநகரான மூக்கியரிலிருந்து சந்திரன் கோவிலிலும், நெபைகத் நெஸார் மன்னனின் அரண்மனையிலும் மலபாரினின்று சென்ற தேக்குக் கட்டைகள் காணப்படுகின்றன.

பாபிலோனில் ஆடைகளைக் குறிக்கும் பட்டியல் ஒன்றில் சிந்து என்ற பெயர் காணப்படுகிறது. வெண் துகிலைக் குறிக்கும் இச்சொல் கண்னடத்திலும், துளுவிலும் வழங்கிவரும் சிந்தி என்ற பழைய திராவிடச் சொல்லிலிருந்து தோன்றியனவாக இருக்கலாம். இது தென்னிந்தியாவோடு பாபிலோனியா நடத்தி வந்த வாணிபத் தொடர்பை விளக்குதற்கு ஏற்ற சான்றாகும்.

ஆப்பிரிக்காவில் கட்டடத்திற்குரிய மரங்கள் இருந்தா லும் தென்னாட்டுத் தேக்கே உயர்வாகக் கருதப்பட்டு உயரிய கட்டடங்கட்குப் பயன்படுத்தப்பட்டு வந்தன. தவிர அவுரியும் நல்லெண்ணெயும் தென்னாட்டினரா

சங்க.-11