பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 சங்க இலக்கியம்

ஆடல் மகளிராகவும், ஆடவர் மெய்க்காப்பாளராகவும் தமிழகத்தில் வாழ்ந்து வந்தனர். மதுரை, புகார் காவிரிப் பூம்பட்டினத்திலும் யவனர் சேரிகள் இருந்ததாகத் தமிழ் நூல்கள் குறிக்கின்றன.

மேற்குக் கடல் துறைமுகமாய முசிறியில் உரோமக் குடியிருப்புக் கோயிலும், உரோமக் காவல் வீரர் 2000 பேரும் இருந்ததாகப் பியூட்டிங்கெரியம் (Peutinggerium Tables) பட்டயம் கூறுகின்றது. பின்னர் கிரேக்கர்களுடைய நிலை தளரவே அராபியர்கள் இந்த வர்த்தகத்தை நடத்த முன் வந்தனர். உரோமப் பேரரசு நீரோ கி.பி. 68 இல் இறந்த பின் தமிழ்நாட்டோடு நடந்த உரோம வாணிகம் குன்றியது. ஆனால் தக்கணத்தின் வடமேற்குக் கரையில் உள்ள நாடுகளோடு அது பின்னும் தொடர்ந்து நடத்தி வந்ததாகவே தோன்றுகிறது. தக்கணத்தில் உள்ள தேர் ஸொபரா, பைதான் கல்யான் போன்ற பல துறைமுகங்களைப் பெரிபுளுஸ்ப் நூல் குறிப்பிடுகின்றது. தமிழகத்தில் உரோம் நாட்டு வாணிகம் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் புத்துயிர் பெற்றது. ஆனால் அதன்பயன் நீடிக்கவில்லை. உரோமாபுரியில் நிகழ்ந்த சில அரசியல் மாறுதல்கள் வாணிபத்திற்குத் தடைவிதித்தன.

ஏற்றுமதிப் பொருட்களும் இறக்குமதிப் பொருட்களும்

அக்கால வியாபாரப் பொருட்களைப் பற்றிய குறிப்புக் களைப் பட்டினப் பாலையிலும் மதுரைக் காஞ்சியிலும் காணலாம். அருமையும் பெருமையும் சான்ற பொருட்கள் காவிரிப்பூம்பட்டினத்து மறுகுகளில் மண்டியும் மயங்கியும் கிடந்த நிலைமையினை,