பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 173

tரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடல் துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத் துணவும் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு

-பட்டினப்பாலை. 185-193

என்னும் வரிகள் உணர்த்தா நிற்கின்றன.

பண்டமாற்றாகக் கொள்ளும் பொருட்டுக் கப்பல்கள் சிறந்த குதிரைகளைக் கொண்டு வந்ததை,

இருங்கழிச் செறுவிற் தீம்புளி வெள்ளுப்புப் பரந்தோங்கு வரைப்பின வன்கைத் திமிலர் கொழுமீன் குறைஇய...பெருநீரோச்சுநர் நனந்தலைத் தேஎத்து நன்கலனுய்ம்மார் புணர்ந்துடன் கொணர்ந்த புரவியோ டனைத்தும்

-மதுரை. 318-323

என்னும் மதுரைக்காஞ்சிப் பகுதி விளக்குகின்றது.

நனந்தலை வினைஞர் கலங்கொண்டு மறுக

என்னும் மதுரைக்காஞ்சிப் பகுதி அணிகள் விற்பனைக் காகத் தூரதேசங்கட்கு எடுத்துச் சென்றமையைக்குறித்து நிற்கின்றது.

தென்னிந்தியாவிலிருந்து ஏற்றுமதியான பொருட்களுள் முத்து, வைரம், இரத்தினக் கற்கள், மிளகு, கருங்காலி, கருமருது, தேக்கு சந்தனம், வெண்துகில், அரிசி, ஏலக் காய், இலவங்கப்பட்டை, இஞ்சி முதலானவை சிறப்