பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 சங்க இலக்கியம்

பானவை. சிங்கம், கடுவாய்ப்புலி, குரங்கு முதலிய விலங்கு களும், மயில், கிளி போன்ற பறவைகளும் ஏற்றுமதியாயின. இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களில் பவளம், கண்ணாடி, ஈயம், பித்தளை, தகரம், ஜாடி, திராட்சை ரசம் முதலியன முக்கியமானவை. அடிமைகளும் இளம்பருவமுடைய மகளிரும் கிரேக்க நாட்டினின்று கொண்டு வரப்பட்டனர்.

மேல்நாடுகளோடு வாணிபம் செய்ததுமின்றி அதே காலத்தில் இந்தியர் கீழ் நாடுகளோடும் ஊக்கமாய் வாணிபம் நடத்தி வந்தனர். கிழக்கில் சீனாவோடும் தென்னிந்தியா நீண்ட காலத்திற்கு முன்னமே வாணிபம் தொடங்கியது. கி. மு. 7ஆம் நூற்றாண்டிலேயே சீனாவிற்கு இந்தியப் பொருட்கள் சென்றதாகச் சில வரலாறுகள் கூறுகின்றன. தமிழில் பட்டினைச் சீனம்’ என்றும் சர்க்கரையைச் சீனி’ என்றும்வழங்கும் பெயர்கள் அந்நாட்டுடன் முன்னாளில் நாம் கொண்டிருந்த தொடர்பை நன்கு விளக்குவனவாம்.

பிலிப்பைன் தீவுகளில் கிடைத்த கோடரிகள், கத்திகள், ஈட்டிகள் முதலான புதைபொருட்கள் தென்னிந்தியாவில் கி, மு. 10ஆம் நூற்றாண்டளவில் பயன்படுத்தப்பட்ட பொருள்களை ஒத்திருக்கின்றன. இவைபோன்ற புதை பொருட்கள் மலேயா, ஜாவா, வடக்கு போர்னியா முதலிய இடங்களிலும் கண்டுள்ளனர். இவற்றையெல்லாம் கண்டு பிடித்த செயல்களால் வடபிலிப்பைனோடு தென்னிந்தியா விற்குக் கி. மு. 1000 ஆண்டு முதலே வாணிகத் தொடர்பு இருந்தமை தெளிவாகிறது.

கலைத் தொடர்பு

கி. மு. 6ஆம் நூற்றாண்டில் இலங்கையின் முதல் அரசனான விசயன் பாண்டியன் மகளை மணம்புரிந்து கொண்டான்.பாண்டியன் இளவரசி சென்ற கப்பலில் யானைகள், தேர்கள், அரசியல் பணியாளர்கள் 75