பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 சங்க இலக்கியம்

இரவின் மாட்டிய விலங்குசுடர் ஞெகிழி உரவு நீரழுவத் தோடு கலங்கரையும் துறை பிறக் கொழியப் போகி

-பெரும்பாண். 349.351

முடிவுரை

இன்னணம் பண்டமாற்றின் மூலமாகவும், நாணய மாற்றின் வழியாகவும் வணிகம் செய்து பின் தரை வாணிகத்தையும், கடல் வாணிகத்தையும் போற்றினர். கடல் வாணிகத்திலும் கரையோரமாகவே கலம் செலுத்தியும் நடுக்கடலில் கலம் செலுத்தியும் வணிகம் செய்தனர். கடல் வாணிபத்தின் மூலம் கலாச்சாரத் தொடர்புகள் வளர்ந்தன. துறைமுகங்கள் பல்கிப் பெருகின. நாட்டின் பொருளாதாரம் வணிகர்களால் சிறப்புற்றது.

இன்னணம் பண்டைத் தமிழரின் வணிகம் மிகச் சிறந்த முறையில் எக்காலத்தவரும், எந்நாட்டவரும் போற்றும் வகையில் அமைந்திருந்தது.