பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. இசைக்கலை

_

முன்னுரை

1. கலை ஒருமை உணர்வைத் தருவது. 2. உள்ளத்தைத் திறந்து காட்டுகிறது. 3. பண்பாட்டின் அடிப்படையில் அமைந்து தூய நல்ல

உள்ளத்தில் அமைதியினின்று பிறப்பது கலை. 4. இக்கலை உயிர்களை எல்லாம் உயர்த்தும், வாழ்விக்கும்,

வளம் பெருக்கும். 5. பண்பாட்டின் எல்லை இகவாத கலை வெறும் புலன் உணர்விற்கு மட்டுமன்றி மக்கள் உள்ளத்திற்கும் உணர்வூட்டும்.

6. மக்கள் உள்ளத்தில் கால எல்லையைக் கடந்து அழியாது நிலைபெற்ற கலை உண்மையில் சமுதாயத்தை உயர்த்த உதவும்.

இந்நலம் சான்ற கலைவகையில் ஒன்றான இசைக்கலை பற்றி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இசையின் ஆற்றல்

இசை என்னும் சொல் இசைவிப்பது, தன் வயப் படுத்துவது என்று பொருள்படும். இசை கல்மனத்தையும் கரைந்துருகச் செய்யும் பெற்றி வாய்ந்தது. கற்றோரும் மற்றோரும் இசையில் வயப்பட்டே நிற்பர். அன்பைப் பெருக்கி ஆருயிரை வளர்ப்பது இசை, இசையைக் கேட்டு