பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 சங்க இலக்கியம்

தொல்காப்பியம் உணர்த்தும் இசை

பழந்தமிழ் மொழியின் ஒப்பற்ற இலக்கணத்தைத் தெளிவுறக்கூறும் தொல்காப்பியம்,

அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை டேலும் உளவென மொழிய இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்

-தொல். 38

என்ற வகையில் பரந்துபட்ட இசைத்தமிழ்க் கலையில் விளக்க நுட்பத்தைச் சுட்டிக் கூறிவிட்டது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலம் பகுத்து வாழ்ந்த தமிழ்மக்களின் கருப்பொருள்களைக் கூறுமிடத்து அவ்வந் நிலங்களுக்குரிய இசைக் கருவியாய யாழினையும், பண்ணையும் குறிக்கின்றார்.

குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த குறவர்கள் குறிஞ்சிப் பண்ணைப் பாடிக் குது கலமுற்றனர். அவர் குறிஞ்சி

யாழினையும் தொண்டகப் பறையினையும் துணைக்கருவி களாகக் கொண்டனர்.

முல்லை நிலத்தில் உறைந்த ஆயர்கள் முல்லைப் பண்ணைப் பாடி எல்லையற்ற இன்பம் கொண்டனர். இவர் கள் முல்லை யாழையும் ஏறுகோட்பறையையும் இசைத்து இன்புற்று வந்தனர்.

மருத நிலத்தில் குடியேறிய உழவர்கள் மருதப்பண்ணை இசைத்து பொருதலற்று வாழ்ந்தனர். மருதயாழும், மணமுழ வும் மீட்டிக் களிப்புற்றனர். இந்த நிலத்தில் பலவகைப் பண்களும் பறைகளும் யாழ்களும் எழுந்தன.

நெய்தல் நிலத்திலே இருந்த பரதவர்கள் நெய்தற் பண்ணை (செவ்வழிப் பண்ணை)ப் பாடிக் களிப்புற்றனர். இந்நிலமக்கள் விளரியாழும் செவ்வழி யாழும் மீன்கோட் பறையும் இசைத்து இன்புற்று வாழ்ந்தனர்.