பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 சங்க இலக்கியம்

மருதநிலத்திற்குரிய மருதப்பண்ணை யாழோர் தாள அறுதியை இனிதாக உட்கொண்டு நரம்பை இனிதாகத் தெறித்து மருதத்தை வாசிக்க இருள் மாய்ந்து கதிர்விரியும் விடியற்காலம் தோன்றும் என்பதை மதுரைக்காஞ்சி புலப்படுத்தும்.

சீரினிது கொண்டு நரம்பினி தியக்கி யாழோர் மருதம் பண்ண......

புலர்ந்து விரி விடிய லெய்த

-மதுரை. 657.664 நன்னனுக்குரிய மருதநாட்டில் எருதையோட்டும் உழவ ரோதையுடன் கூட யாழிலே மருதத்தை வாசித்துப் பாணர் தங்கிப் போவர் என்பதை,

து கடும்பு வருந்தி யெருதெறி களம ரோதையொடு நல்யாழ் மருதம் பண்ணி யசையினிர் கழிமின்

என்னும் மலைபடுகடாத்துவரிகள் தெளிவுபடுத்துகின்றன. மருதத்தை வாசித்த கரிய தண்டினையுடைய சிறிய யாழின் நம்பினோசைக்கு மேற்போகாது அவ் வோசையுடனே கூடி ஒரோசையாம் இனிதாய பாட்டினைப் பாடுவர் விறலியர் என்பதை மலைபடுகடாம் வரிகள் உணர்த்துகின்றன.

மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சிறியாழ்

நரம்புமீ திறவா துடன் புணர்ந் தொன்றிக்

கடவ தறிந்த வின் குரல் விறலியர்

-மலைபடு. 534.536

குறிஞ்சிப்பண் நடுயாமத்தில் இசைக்கக் கூடியது. அதிசயம் பொருந்திய இனிய யாழினையுடைய விறலியர் நறிய கரியபக்கமலையிலே குறிஞ்சிப் பண்ணைப் பாடுவதை மலைபடுகடாம் தெளிவிக்கின்றது: