பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 சங்க இலக்கியம்

வோசையை மாரிக்காலத்து மாலைப்பொழுதில் தமியளா யிருக்கும் தலைவி கேட்டு உள்ளம் சோர்வாள் என்பதை அகநானூறு செப்புகின்றது,

பையுள் கல்யாழ் செவ்வழி வகுப்ப

ஆருயிர ணங்குத் தெள்ளிசை

மாரி மலையுந் தமியள் கேட்டே

-அகம். 214:13-15

பாலை நிலத்திற்குரிய பாலைப்பண் நண்பகலில் இசைக்கப்படுவது. பாணனது கையிலுள்ள பேரியாழைப் பாலைப்பண்ணாக அமைத்து மிடற்றுக்குரலோடு ஒன்றுபட்ட இனிய இசையிலே தழிஞ்சி என்னும் துறைப்பொருள் அமைந்த பாடல்களைப் பாடுவர் என்பதைப் பதிற்றுப்பத்து,

பாணர் கையது பணிதொடை நரம்பின்

விரல்கவர் பேரியாழ் பாலை பண்ணிக்

குரல்புன ரின்னிசைத் தழிஞ்சி பாடி

-பதிற். 57:7.9

என்று போற்றுகின்றது. இனிய நரம்புக் கட்டையுடைய பாலை யாழை வாசித்தலில் வல்லோன், பண்கள் எல்லாவற்றி லும் துன்பத்தைச் செய்யும் உறுப்பையுடைய பாலைப் பண் களை மாறி மாறி வாசிப்பான். இத்தகைய பாலைப்பண் வெவ்வேறு சுவையுடைய மதுவிற்கு ஒப்பாகும். இதனை ,

தீந்தொடை நரம்பின் பாலை வில்லோன் பையு குறுப்பிற் பண்ணுப் பெயர்த்தாங்குச் சேறுசெய் மாரியி னளிக்குகின் சாறுபடு திருவி னனைமகி ழானே

-பதிற். 65.14.17

என்னும் பதிற்றுப்பத்து அடிகளால் உணரலாம். அழியை அலைக்கும் கள்வர் தம் கையில் உள்ள படைக்கலன்களைக்