பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 சங்க இலக்கியம்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும், பல குறிப்புக்களைத் தருகின்றன. வரி வண்டுகளின் இசையினால் புதல்களி லுள்ள பூங்கொத்துக்கள் கட்டு நெகிழ்ந்து மலர்வன என்னும் செய்தியைக் குறுந்தொகை,

■■ 軸。■■ ■■ ■■■ 軒 轟 பிதலும் வரிவண் டு தவாய் நெகிழ் ந் தனவே

-குறுந். 260:1.2

என்று கூறுகின்றது. குறிஞ்சி நிலமகள் ஒருத்தி தழைத்து நீண்ட தனது கூந்தலைக் கையாற் பெயர்த்துக் கோதிக் கொண்டு பெரிய மலையின் பக்கத்தே குறிஞ்சிப் பண்ணைப் பாடிக்கொண்டு நிற்கின்றாள். தினைக்கதிரினைத் தின்று கொண்டு நின்ற யானை ஒன்று அப் பாட்டைக் கேட்டதும் தான் கொண்ட தினைக்கதிரினையும் உட்கொள்ளாது நின்ற நிலையினின்றும் அகலாது துயில் வரப் பெறாத கண்கள் துயில் வரப்பெற்று விரைந்து தூங்கும் நிலையினை அகநானு று,

ஒலியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக் குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது படாஅப் பைங்கண் பாடுபெற் றொய்யென மறம் புகல் மழகளி றுறங்கும்

- அகம். 102:5.9

என்னும் வரிகளால் படம்பிடித்துக் காட்டுகிறது.

வழிப்பறிக் கள்வர் இசைக்கு மயங்கித் தம் தொழிலை மறந்து நிற்றலை ,

ஆறலைக் கள்வர் படைவிட வருளின் மாறுதலை பெயர்க்கு மருளின் பாலை

-பொருத 21-22