பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 198

4. கைக்கிளை

இசை வகையில் சிறிய கிளை என்ற பொருளில் இக்கைக்கிளைப் பெயர் காரணப் பெயராக எழுந்துள் ளது. இதன் குறியீட்டெழுத்து “த” ஆனதால் அவ் வெழுத்தினைத் தழுவி வருவதுபற்றித் தைவதம் எனக் கூறப்பெறுவதும் உண்டு,

5. உழை

உழை என்ற சொல் இடத்தது என்று பொருள் பெறும். குழலிலும் யாழிலும் இடக்கையால் இசைக்கப் படுவது குறித்து இச்சொல் வழங்கி வந்தது என்றும் கூறலாம். இதன் குறியீட்டெழுத்து நி’ ஆனதால் நிசாதம் என்று கூறும் பழக்க மும் பிற்காலத்தில் எழுந்தது.

6. இளி

இதற்கு அடிமனை, இசை, பட்டடை என்னும் பெயர்கள் உண்டு. ஆறுபிறப்பிப்பது என்றும் ஆறாவது என்றும், ஆறு நிலைகளின் வழி வருவது ஆதலாலும் சட்ஜம் என்று கூறப்பட்டது.

7. விளரி

ஒரு நிரலாக உள்ள ஒரு தொகுதியை நிறைவு செய்கின்ற ஒன்றினுக்கு விளரி என்று பெயர். இது இகர விகுதி பெற்று இறுதி இசை என்ற பொருளில் இரிஷபம் எனக் கூறப்பெற்றது.

இக் காரணங்கள் யாவும் தமிழ்மரபை ஒட்டியனவாகும். எந்த மரபைக் கொண்டு காரணம் கற்பித்தாலும் ஒலி வகை களான இவற்றிற்குப் பொருந்தும். எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே என்பது தமிழ் இலக்கண வழக்கு.