பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சங்க இலக்கியம்

தமிழினத்தின் பழமையை ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம்

■-■ ■ ■ ■■ ■■■ ■■ ■ ■ ■■■ ■。■ 疊 ■ ■ * ■ 畢。■ ... உறுபகை வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ் போந்தை வேம்பே ஆர் என வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்

எனக் குறிப்பிட்டுச் செல்கின்றது.

பி. தி. சீனிவாச ஐயங்கார் தம் திராவிட இந்தியா என்ற நூலில், இந்தியாவிலே புதிய கற்கால நாகரிகம் 20, 000 ஆண்டுகட்குமுன் தொடங்கி எல்லா ஆற்றோரங்களிலும் பரவியது. தமிழில் முதற் பருவத்திலுள்ள சொற்களெல்லாம் ஒரசையாயின. சர். ஜான்மார்ஷல் என்பவர் அரப்பா’ “மொகஞ்சதரோ” என்னுமிடங்களில் அகழ்ந்து கண்டு பிடிக்கப்பட்ட ஒவிய எழுத்துக்களைக் குறித்த எழுத்துக் களாக அமைதல் கூடும். இந்தியாவின் புதிய கற்கால நாகரிகம் இந்தியாவினின்றும் கடல் வழியாகச்சென்று சுமேரிய நாகரிகத்துக்கு ஏதுவாக அசீரியாவில் தங்கினது சுமேரியருக் கும் தமிழருக்கும் முகவெட்டு ஒருவகையாகவிருத்தல் தற்செயலாக ஏற்பட்டதன்று என்னும் பகுதி தமிழகத்தின் தொன்மையையும் சிறப்பையும் உணர்த்தி நிற்கிறது.

இவ்வாறாகத் தமிழினத் தொன்மையை, தமிழர்கள் பல்வேறு இடங்களில் சென்று குடியேறியதை அறிஞர்கள் பலரும் தத்தம் நூல்களில் குறித்துச் சென்றுள்ளனர்.

வால்மீகி இயற்றிய இராமாயணம் வடமொழியில் ஆதிகாவியம் என்று புகழ் பெறுவது. அத்தகைய ஆதிகாவி யத்தில் பாண்டிய மன்னனும் அவனது தலைநகரமும் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை,

பொன்னிறைந்ததாயும் அழகுடையதாயும், முத்து மயமான மணிகளால் அலங்கரிக்கப் பெற்றதாயும் பாண்டியர்க்குரியதுமாகிய கவாடத்தைப் பார்க்கக் கடவீர்.

-வால்மீகி