பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 195

ான இசையாசிரியனின் இலக்கணம் இயம்புகிறது. ஆடல் அரங்கில் எழுந்த இசை முழக்கத்தினை,

குழல்வழி கின்றது யாழே யாழ்வழித் தண்ணுமை கின்றது தகவே தண்ணுமைப் பின்வழி கின்றது முழவே முழவொடு கூடி நின்றிசைத்தது ஆமந்திரிகை

ான்று குறிப்பிடுகின்றார். பெண்கள் உலக்கை கொண்டு குற்றும்பொழுதும் பந்தாடும் பொழுதும், ஊசலாடும்பொழுதும் பாடிக்கொண்டே செயல்பட்டனர் என்பதைச் சிலப்பதிகாரம் வாழ்த்துக்காதையால் அறியலாம். கடற்கரை ஓரத்திலிருந்து இன்பமாகப் பாடும் பாடல் வரிப்பாடல் எனப்பட்டது. அது கானல்வரி என வும் பெயர் பெற்றது. அப் பாடல்களைச் சிலப்பதிகாரத்தில் கண்டு மகிழலாம் .

மருங்கு வண்டு சிறந்தார்ப்ப

மணிப்பூ ஆடை அதுபோர்த்துக் கருங்கயற்கண் விழித்தொல்கி

நடந்தாய் வாழி காவேரி கருங்கயற்கண் விழித்தொல்கி

நடந்த எல்லாம் கின் கணவன் திருந்து செங்கோல் வளையாமை

அறிந்தோன் வாழி காவேரி

சிலப்பதிகாரத்தில் வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, ஊர் சூழ்வரி, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை என்னும் ஆறு காதைகளும் இசைப்பக்களின் தொகுதியே ஆகும்.

பவள வுலக்கை கையாற் பற்றித் தவள முத்தம் குறுவாள் செங்கண் தவள முத்தம் குறுவாள் செங்கண் குவளை அலை கொடிய கொடிய