பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 சங்க இலக்கியம்

பொன்னிலங்கு பூங்கொடி பொலஞ்செய் கோதை

வில்லிட மின்னிலங்கு மேகலை களார்ப்ப வார்ப்ப வெங்கணுங் தென்னன் வாழ்க வாழ்க வென்று சென்றுபர்

தடித்துமே தேவரார மார்பன் வாழ்க வென்று பந்தடித்துமே

என்பன முறையே கானல்வரியிலும் வாழ்த்துக்காதையிலும் உள்ளன.

இன்னணம் சங்க இலக்கியங்கள் அற்றைத் தமிழரின் இசை ஞானத்தை இயம்பிக் கொண்டிருக்கின்றன.

இசைவாணர்கள்

சமுதாயத்தில் பொருளாதார வளம் பெருகப் பெருக இசைக்கருவிகள் பல எழுந்தன. அப்பால் இசை வளர்ப்பதற்கும் இசைக்கருவிகள் செய்வதற்கும் இசைப் பாட்டுக்கள் இயற்றுவதற்கும், பாடுதற்கும் இசைக்கருவி களைப் பழுது பார்ப்பதற்கும், அதை மீட்டுவதற்கும், கூத்தாடுவதற்கும், நாட்டியம் ஆடுவதற்கும் தனித்தனி இனம் தோன்றியது. சமுதாயத்தில் பாணன், பாடினி, விறலியர், கூத்தர் போன்றோர் தோன்றினர். துடியர் பறையர் என் போர் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே துளிர்த்து விட்டனர்.

பாணர்களும் பாடினிகளும்

பாணர்கள் பண்டைத் தமிழகத்தில் பாடுவதையே தொழிலாகக் கொண்டு பண்புடன் வாழ்ந்த ஓரினத்தவர்கள். இவர்களில் ஆண்மக்களைச் சென்னியர், வயிரியர் செயிறியர், மதங்கர், இன்னிசைகாரர், பாணர் என்று பிங்கல நிகண்டு கூறுகிறது. பெண்பாலாரைப் பாடினி, விறலி, பாட்டி, மதங்கி, பாடல் மகடு உ, பாண்மகள் என்று திவாகரம்

கூறுகிறது.