பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 197

பாணர்களில் இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப் பாணர் என மூன்று வகையினர் உண்டு. இசைப்பாணர் மிடற்றால் பாடுபவர்கள். யாழ்ப்பாணர் யாழ் மீட்டுபவர்கள். மண்டைப் பாணர் மண்டையோட்டில் இரந்துண்பவர்கள்

யாழ்.மீட்டும் பாணர்களில் சீறியாழ் மீட்டும் சிறுபாணர் பேரியாழ் மீட்டும் பெரும்பாணர் என இருவகை உண்டு சிறியாழ் என்பது செங்கோட்டியாழ் எனப்படும். இது ஏழு நரம்புகளையுடையது. பேரியாழ் பெரிய யாழ் ஆகும். அது பரவையாழ் என்றும் கூறப்படும். இது இருபத்தொரு நரம்புகளையுடையது. சிறு பா ண ைர ஆற்றுப்படுத்தி இயற்றப்பட்ட நூல் சிறுபாணாற்றுப்படை என்ற நூல். பெரும்பாணரை ஆற்றுப்படுத்தத் தோற்றுவிக்கப்பட்ட நூல் பெரும்பாணாற்றுப்படை என்ற பெருமை சான்ற நூலாகும்.

யாழ்ப்பாணர் என்போர் யாழை மட்டுமன்றிக் குழலை யும் மீட்டி வந்தனர் என்று இளங்கோவடிகள் எடுத்துக்காட்டி யுள்ளார்,

குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும் வழுவின்றி சைத்து வழித்திறம் காட்டும் அரும்பெறன் மரபிற் பெரும் பாணிருக்கையும்

-சிலப். 5: 35.37

தமிழகத்தில் பழங்குடி மக்களில் பாணர்க்குச் சிறப்பான இடம் அளிக்கப் பெற்றிருந்தது என்பதை நமக்கு மாங்குடி கிழார் என்னும் சங்கப் புலவர் ஒருவரும் அறிவுறுத்துகிறார். துடி எனும் இடை சுருங்கிய பறையை இயக்குபவராகிய துடியர். யாழ் எனும் நரம்புக் கருவியை மீட்டுபவராகிய பாணர், பறையாகிய தோற்கருவியை முழக்கும் பறையர் ஆகிய குடிமக்கள் சமுதாயத்தில் இருந்த நிலையினை,