பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 199

அழல்புரிந்த வடர் தாமரை ஐதடர்ந்த நூற் பெய்து புனைவினைப் பொலிந்த பொலனறுந் தெரியல் பாலுமயி ரிருந்தலைப் பொலியச் சூட்டி பாண்முற் றுககின் னாண்மகி ழிருக்கை

ான்னும் புறநானூற்றுப் பகுதியால் விளக்கமுறுகிறது.

தொல் காப்பியர் காலத்திற்கு முன்பிருந்து பாணர்கள் தமிழகத்தில் நிலைத்த குடிகளாய்த் தழைத்திருந்தனர். அவர்கள் தலைவன் தலைவியரிடத்துத் துனது போதலை அகப்பொருள் நூல்கள் கூறும். விறலியர்களும் தூது போதல் உண்டென்பதை விறலி வி டு துா து விளக்குகிறது. தொல்காப்பியத்தில் பாணர் மூலம் தலைமகனது ஊடலைத் தீர்ப்பது முந்தையோர் கண்ட முதிய வழக்கம் என்பது நன்கு தெரிகிறது.

பாணன் கூத்தன் விறலி பரத்தை

யான ஞ் சான்ற அறிவர் கண்டோர்

பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் முதலா

முன்னுறக் கிளந்த அறுவரோடு தொகை இத்

தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்

என்பது தொல்காப்பியம்,

பாணன் தலைமகள் ஊடல் தீர்க்கும் வாயில்களில் ஒன்றாவான். வையாவீக் கோப்பெரும் பேகன் தன் மனைவி கண்ணகியைத் துறந்திருந்தபொழுது அவனாலே துறக்கப்பட்ட கண்ணகி காரணமாக அவனைப் பாடிய பரணரும் அரிசில் கிழாரும், பெருங்குன்றுார் கிழாரும் அகத்தினை மரபின்படித் தம்மைப் பாணராக வைத்துச் செய்யுள் செய்தமை மேலே குறித்த கருத்தினை வலியுறுத்தும், அத்தகைய பாடல் ஒன்றில்,