பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 சங்க இலக்கியம்

பசித்தும் வாரேம் பாரமு மிலமே

எனப் பரணர் பாடுவார். ஏனெனில் உண்மைப் பாணராயின் இவ்விரண்டும்-பசியும் காக்கப்படும் சுற்றமும்.உடையராகவே இருப்பர்.

பாணர்களின் வறுமையையும், அவர்களது உடல் நிலையையும்,

உடும்புரிந்தன்ன என் பெரு மருங்கிற்

கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது

சிலசெவித் தாகிய கேள்வி நொந்துநொந்து

ஈங்குவென் செய்தியோ பான என்னும் புறநானூற்று அடிகள் உணர்த்தி நிற்கின்றன. பாணர்களின் நிலையை மற்றொரு புறநானூற்றுப் பாடல் புலப்படுத்துகிறது,

கையது கடனிறை யாழே மெய்யது புரவல ரின்மையுற் பசியே யரையது வேற்றிழை நுழைந்த வேர் நனை சிதாஅர் ஒம்பி யுடுத்த வுயவிற் பாண

-புறம், 69:1 . 4 என்பது அப்பாடல்.

பாணர்கள் உவப்ப அவருடைய பசியை ஆற்றியவன் என்னும் சிறப்புடையவன் நம்பி நெடுஞ்செழியன். இதனை,

பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே ஆடுநர்க் கீத்த பேரன் பின்னே

அனையனென்னா தத்தக் கேளனை கினையாக் கூற்ற மின்னுயி ருய்த்தன்று பை த லொக்காற் றழிக யதனை வைகம் வம்மோ வாய்மொழிப் புல வீர்

என்னும் புறப்பாட்டடிகள் உணர்த்தி நிற்கின்றன.