பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--

சிவ பார்வைகள் 201

பாரி, பாடல்வல்லுநருக்கு நாடும் ஊரும் பரிசிலாகக் கொடுத்ததைப் புறம் விளக்கி நிற்கிறது.

ஆடினிர் பாடினிர் செலினே காடுங் குன்று மொருங்கீ யும்மே

-புறம். 109: 17-18

பாணர்களின் பழம்பெரும் குடியில் திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருப்பாணாழ்வார், பாணபத்திரர், மதங்க குளாமணியார் முதலியோர் தோன்றினர். சம்பந்தப் பிள்ளையார் பாணரைக் குலவேற்றுமை நிலவேற்றுமை பாராது சிவனடியார்கள் இல்லத்திற்கு அழைத்துச்சென்று அவருக்கு உணவு படைக்கும்படிச் செய்து உடனிருந்து வந்ததோடு உயர் குலத்தார் இல்லத்திற்குள்ளே பாணர் உறைவதற்கும் இடம் அளிக்கச் செய்தார். இடைக்காலத்தில் பாணர்கள் திருக்கோயிலினுள் புகவொட்டாது தடுக்கப்பட்ட நிலையையும் திருஞானசம்பந்தர் மாற்றி அமைத்தார். திருநீலகண்ட யாழ்ப்பாணரது யாழ் மழையில் நனைந்து கட்டழியாதபடி எழில் குன்றாதபடி இறைவன் பாணர்க்குப் பொற்பலகையிட்டு அவரது யாழின் ஒ லி யி ைன மிகுவித்தருளினார்.

இன்று பாணர்குலம் எண்ணிக்கையில் சிறுபான்மை யராய் மதுரை, திருநெல்வேலி, சாத்தன்குளம் போன்ற இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். தொழிலின்றிப் பலர் தையல்தொழில் புரிந்து வருகின்றனர். சிலர் கூத்தாடி வயிறு வளர்த்து வருகின்றனர். பாணர்கள் முற்காலத்தில் தூண்டில் மீன்பிடித்து வயிறு வளர்த்த செய்தியினை,

பச்சூன் பெய்த கவல்பிணி பைந்தோல் கோள்வில் பாண்மகன் தலைவலித் தியாத்த நெடுங்கழை தூண்டில் நடுங்க நாண்கொளி.இ பொதியிரை கதுவிய போழ்வாய் வாளை

-பெரும்பாண். எனப் பெரும்பாணாற்றுப்படை அடிகள் பேசுகின்றன. பாண்மகளிர் மீன் விற்று வந்த செய்தியினை,

சங்க.-13