பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 சங்க இலக்கியம்

அம்சில் ஓதி அசைகடைப் பாண்மகள் சில்மீன் சொரிந்து பல்நெற் பெறு உம் H

-ஐங்குறு. என்னும் ஐங்குறு நூற்றடிகள் தெளிவாக்குகின்றன.

கேரள நாட்டில் பாணர் இனம் இன்றும் இருந்து வருகின்றது. இவர்களில் திருவரங்கப் பாணன், மீன்பிடிக்கும் பாணன், குடைகட்டிப் பாணன், புள்ளுவப் பாணன் என நான்கு பிரிவுகள் உண்டு. இவர்களில் புள்ளுவப் பாணர் இன்று ஆடுமாடு மேய்த்து வரும் மலைச்சாதியினராய் மாறிவிட்டனர். இவர்கள் இன்று வேட்டையாடுவர். வில் கொண்டு பறவைகளை அடித்து வீழ்த்துவர். அந்த வில் நாணை விரல் கொண்டு மீட்டி இன்னிசையெழப் பாடுவர். இந்தப் புள்ளுவப் பாணர்கள் இன்றுவரை தம் பழைய மரபு கெடாதபடி பாதுகாத்து வருகின்றனர்.

மேலும் இப்பாணர் பாட்டுப்பாடல் மத்தளம் கொட்டல் முதலியவைகளில் திறமை மிக்கவர்களாய் உள்ளனர். தோல் கட்டுதல், போன்ற தொழில்களையும் செய்து வருகின்றனர். இவர்கள் இன்று தீண்டத்தகாத குலத்தவர்கள் போல் எண்ணப்பட்டு வருகின்றனர்.

இலங்கையின் வடபாகத்தில் தமிழர்கள் வாழும் பகுதி யாழ்ப்பாணம் எனப்படும். யாழ்ப்பாணம் பகுதியில் சிங்கை நகர் என்னுமிடத்தில் உக்கிரமசிங்கன் மகன் செய்துங்க வரராசசிங்கன் என்பவன் ஆட்சி நடாத்துங்கால் யாழ்ப்பாடி என்னும் பாணன் ஒருவன் அவனது அவைக்களம் அண்மி யாழ்மீட்டி அவனது அகங்குளிரச் செய்தான். அதனால் அவ்வரசன் அகமகிழ்ந்து இன்று கரையூர் என்றும் பாசறையூர் என்றும் அழைக்கப்படும் மண்மேட்டைப் பரிசாக அளித்தான். அதன்பின் அங்குப் பாணனும் அவன் சுற்றமும் குடியேற அவ்விடம் யாழ்ப்பாணம் என அழைக்கப்பட்டது. பின் பரங்கிக்காரர் கட்டிய குடாநாடு முழுவதற்கும் யாழ்ப்பாணம் என்ற பெயர் உரித்தாகி