பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 - mrir 6to suc56r 203

நிலைத்துவிட்டது என்று கூறப்படுகிறது. இந்தக் குடாநாடு முழுவதும் பாணனுக்குப் பரிசாக வழங்கப்பட்டது என்று ol- றவாரும் உண்டு. மறுப்பாரும் உண்டு. (Ancient Jaffna — Mudaliar C. Rasanayagam. C.C.S. P. 273. 274)

யாழின் மறுமலர்ச்சியிலே பாணர் இனமும் யாழ்* கொடியும் ஏன் யாழ்ப்பாணமும் சிறப்புற்று எழும் என்பதி ! அயமில்லை.

விறலியர்

விறலியர் பாணர் இனத்தில் ஒரு பிரிவினர். ஆடல் தொழில் புரியும் ஆண்மக்கள் கூத்தர் எனப்படுவர். பெண்கள் விறலியர் எனப்படுவர். பாணனும் பாடினியும் ஒருவகுப்பார் என்றும், கூத்தரும் கூத்தியும் பானர்களில் ஒரு பிரிவினர் ான்றும், விறலியர் இவ்விரண்டும் அல்லாத ஒரு தனி இனம் என்றும் கூறுவாருமுண்டு. பாடினிகளே விறலியர் என்று மொழி,நரும் உண்டு.

எண்வகைச் சுவையும் உள்ளத்தில் உதிக்கும் குறிப்பு களும் வெளிப்பட ஆடுதல் விறலாதலின் அதனை ஆடுபவள் விறலி எனப்பட்டாள். இவர்களை வேந்தர்களும் மன்னர் களும் வள்ளல்களும் நிலக்கிழார்களும் ஆதரித்து வந்தனர். மன்னர்கள் அவர்களுக்குப் பொற்கலங்களை, பொற்றாமரைப் பூவை, யானையைப் பரிசளித்து வந்தனர். நன்னன் சேய் என்னும் சங்ககால அரசன் விறலியர்க்குப் பேரணி கலங் களைப் பரிசளித்து வந்தான் என்பதை மலைபடுகடாம் உணர்த்தி நிற்கின்றது.

தலைவன் றாமரை மலைய விறலியர் சீர்கெழு சிறப்பின் விளங்கிழை யணிய

-ഥങ്ങ ഓു. 669- 670 விறலியாற்றுப்படை என்பது வேந்தன் புகழைப் பாடுவதும், விறலியை ஆற்றுப்படுத்துவதும் ஆம். தொகை நூல்கள் பல விறலியரைப் பற்றிப் பேசுகின்றன.