பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 17

என்னும் பகுதியினால் உணரலாம். இத்தகைய ஆதிகாவி யத்தில் தமிழ்மொழி வளர்ந்த நகரத்தைப் பற்றிய குறிப்புக் காணப்படுவதால் தமிழகத்தின் தொன்மையை ஒருவாறு உயததுணரலாம.

பாணினிக்கு இந்தியாவின் முழுநிலப்பரப்புத் தெரியா திருக்க அவருடைய நூலின் உரையாசிரியரான காத்தியா யருக்கு இமயம் முதல் குமரி வரை உள்ள நாடுகள் அனைத் தும் தெரிந்து இருந்தமை வியப்பிற்குரியதாகும். இவர் சோழ பாண்டிய நாடுகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இவரது காலம் மெளரியப் பேரரசுக்கு முற்பட்ட நவநந்தரின் ஆட்சிக் காலம் என்று வடமொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதனால் இவருடைய காலம் கி.பி. நான்காம் நூற்றாண் டிற்கு முற்பட்டதாகும். இக் காலத்தில்தான் தமிழகத்திற்கும் வட நாட்டிற்கும் நேரடியான தொடர்பு உண்டாகியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

அலெக்சாண்டர் காலத்தில் இந்தியாவின் நில இயலைப் பற்றிய நிறைந்த அறிவு இருந்ததாகத் தெரிகின்றது. ஸ்டிரெபோ என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர் அலெக்சாண்டரின் படையெடுப்பின்போது இ ந் தி ய நாட்டினை முழுவதும் அறிந்தவர்களைக்கொண்டு இந்திய நாட்டின் முழு வருணனையை எழுதச் செய்தான் என்று கருதப்படுகிறது.

மெளரியப் பேரரசர் காலத்தில் இந்திய நாட்டின் நில இயல் அறிவு ஆழ்ந்தும், பரந்தும் இருந்தது என்பதை நாம் இந்திய வரலாற்றின் மூலம் அறிகின்றோம். சந்திரகுப்த மெளரியரின் அவைக்களத்திருந்த கிரேக்கத் தூதரான மெகஸ்தனிஸ் தமது இந்திகா என்ற நூலில் பாண்டிய நாட்டின் செல்வத்தையும், பாண்டியனது படை ஆற்றலை யும், அவனது அரச மாதேவியின் சிறப்பையும், அந் நாட்டிற்கே உரியதும் சிறப்புடன் நிகழ்ந்ததுமான முத்துக் கொழிக்கும் தொழிலையும் பற்றி விளக்கம் தந்துள்ளார்.