பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 சங்க இலக்கியம்

விறலியர் என்றால் கூத்தி, ஆடுமகள், ஆடுகளமகள், பாடன் மகடு உ. பதினாறு வயதுப்பெண் என்று நிகண்டு களில் குறிப்பிடப்பட்டுள்ளது. விறலியர் சங்ககாலத்தில் கூத்துக்கலையைக் காத்து வந்தனர். இவர்கள் ஆடும் அரங்கை ஆடுகளம், அரங்கம், அம்பலம், கூத்தம்பலம், ஆடரங்கம், மன்றம் என அழைத்தனர்.

விழாக் காலங்களில் விறலியர் மறலியும் உவக்கும் பல்வேறு கூத்துக்களை ஆடுவர். விழாக்களில் அரங்கேறிய விறலியர் சிறப்புற ஆடினர் என்று கண்டால் அவர் களுக்கு அரசன் அரிய பொன் அணிகலன்களையும் பிற விலையுயர்ந்த பொருள்களையும் பரிசாக அளிப்பான். பட்டங்களையும் வழங்குவான். மாதவியாகிய மேதகு விறலிக்கு மன்னன் தலைக்கோல் என்னும் பட்டம் சூட்டி னான், என்று இளங்கோவடிகள் காட்டுகின்றார்.

கூத்தர்

ஆடல் பாடல் வளர்ச்சியுற்றுக் கூத்தாக எழுந்தது கூத்து என்பதை இன்று நாடகம் என நவில்கின்றோம். கூத்து என்பது கதை தழுவி வரும் ஆடலும் பாடலும் ஆம். கூத்தாடுபவர்கள் கூத்தர் எனப்பட்டனர். கூத்தாடும் மகளிர் கூத்தி எனக் கூறப்பெறுவார். கூத்தாடும் இடம் அம்பலம். ஆடும் அரங்கு, கூத்தம்பலம், கூத்துமேடை என அழைக்கப் பெறும்.

பொருநர்

பாணர்களில் ஒரு பிரிவினர் பொருநர். இவர்கள் ஏர்க் களம் பாடும் பொருநர். போர்க்களம் பாடும் பொருநர், பரணி பாடும் பொருநர் என மூன்று பிரிவினராகக் காணப் படுகின்றனர். பத்துப்பாட்டுள் ஒன்றாகிய பொருநராற்றுப் படை பொருநன் ஒருவனைக் கரிகாற் பெருவளத்தானிடம் ஆற்றுப்படுத்தியதாகப் பாடப்பெற்ற நூலாகும். போர்க்