பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ பார்வைகள் 205

அாம் பாடும் பொருநர் வேந்தனின் வெற்றியை வெகுவாகப் புகழ்ந்து பாடுவோர்களாவர். இவர்கள் மன்னர்களால் பொன்னும் பொருளும் மணியும் கொடுத்து ஆதரிக்கப்பட்டு வந்தனர். ஏர்க்களம் பாடும் பொருநர் பெரிய நிலக்கிழார் _ளைப் பாடி அவர்களால் உணவூட்டப் படுபவர்களாய் இருந்தனர். பரணிபாடும் பொருநர் ஆயிரம் யானைகளைப் போரில் கொன்று பகைவர் மீது வெற்றி பெற்ற பேரரசனைப் புகழ்ந்து பாடுபவர் ஆவர். இவர்களுக்கு மன்னர்கள் பொன் மாலை, முத்துமாலை, யானை போன்ற பரிசுகளை அளிப்பார்கள்.

சேரமான் வஞ்சி பொருநர்களை ஒம்பியதைப் புற நானுாறு செப்புகின்றது:

விரும்பிய முகத்த னாகி யென தரைத் துரும்புபடு சிதாஅர் நீக்கித் தன்னரைப் புகைவிரிங் தன்ன பொங்குதுகி லுடீஇ அழல் கான் றன்ன வரும்பெறன் மண்டை நிழல் காண் டேற னிறைய வாக்கி யானுண வருளலன்றியுந் தானுண் மண்டைய கண்ட மான்வறைக் கருனை கொக்குகிர் கிமிர லொக்க லார வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும் விரவுமணி யொளிர்விடு மரவுற ழாமொடு புரையோன் மேனிப் பூத்துகிற் கலிங்க

முரைசெல வருளியோனே

-புறம். 398: 18-29

என்னும் புறநானூற்றுப் பாடலின் மூலம் பொருநர்கள் பறை கொட்டுபவர்கள் என்பதும் பாணரும் பொருநரும் வேறுவேறு தன்மை கொண்டவர்கள் என்பதும் தெளிவாகிறது. அக் காலத்தில் பொருநரின்றிக் கோடியர் வயிரியர் என்று இரு இசைக் குழுவினரும் இருந்தமையும் அறியப்படுகிறது.