பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 209

கருங்கோட்டுச் சீறியாழ்

-நெடுநல். 70

ஏழ்புணர் சிறப்பி னின்றொடைச் சீறியாழ்

-மதுரை. 559

வள்ளுயிர்ப் பேரியாம்

ளு Ꮜ? -மலைபடு. 37

இடனுடைப் பேரியாழ்

g9)] էք -பெரும்பாண். 462

ான்பன சங்க இலக்கியங்கள் காட்டும் யாழ்வகைகள்.

பத்துப்பாட்டில் நான்கு பாடல்கள் யாழின் அமைப்பைப் பற்றி விரிவாக விளக்குகின்றன.

குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல் விளக்கழ லுருவின் விசியுறு பச்சை மெய்யா விளஞ்சூற் செய்யோ ளவ்வயிற் றைதுமயி ரொழுகிய தோற்றம் போலப் பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை யளைவா ழலவன் கண்கண் டன்ன துளைவாய் தூர்ந்த துரப்பமை யாணி யெண்ணாட் டிங்கள் வடிவிற் றாகி யண்ணா வில்லா லமைவரு வறுவாய் பாம்பனந் தன்ன வோங்கிரு மருப்பின் மாயோன் முன்கை யாய்தொடி கடுக்கும் கண்கூ டிருக்கைத் திண்பிணித் திவவி னாய்தினை யரிசி யவைய லன்ன வேய்வை போகிய விரலுளர் நரம்பிற் கேள்வி போகிய நீள்விசித் தொடையல்

இது பொருநராற்றுப்படை சித்திரிக்கும் யாழின் அமைப்பு. இதில் பத்தல், தோற் பார்வை, ஆணி, வறுவாய், மருப்பு, திவவு, நரம்பு என்பன இங்குக் காட்டப்படும் யாழின் உறுப்புக் கள். இவ்வாறே சிறுபாணாற்றுப்படையும், மலைபடு