பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 சங்க இலக்கியம்

  • = H = H = H H = ... ஆகுளிகடுப்பு

ளுை யிரட்டு கெடுகலை யடுக்கத்து குடிஞை -மலைபடு. 140:141

என்பன காட்டும்.

எல்லரி

மலைபடுகடாம் குறிக்கும் சிறிய பறை. விளக்கம் பொருந்திய தாளத்தைக் கொண்டு ஒலிக்கும் வலிய வாயை யுடையது. எல்லரி. இதனை .

கடிகவர் பொலிக்கும் வல்யெல்லரி

-மலைபடு. 10 என மலைபடுகடாம் குறிக்கின்றது.

தடாரி

தடாரி என்பது கினைப்பறை,

அரிக்குரற் தடாரி

-புறம். 390: 8 எனப் புறநானூற்றாலும்,

அரிக்குரற் றடாரியின் யாமை மிளிரி

-புறம். 249: 4

மதியத் தன்னவென் னரிக்குரற் றடாரி

-புறம். 398: 12

என்னும் புறநானூற்றடிகளாலும்,

பைத் த பாம்பின் றுத்தி யேய்ப்பக் கைக்கச டிருந்த வென் கண்ணகன் றடாரி

-பொருந. 69-70 என்னும் பொருநராற்றுப்படை அடிகளாலும் சங்ககாலத்தில் தடாரிப்பிறை இருந்தமை தெளிவாகிறது.