பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

சங்க இலக்கியம்

வயிர்

இது ஊதுகொம்பு என்று இக்காலத்தில் வழங்கப்படுகின்றது.

வளைநர ல வயிரார்ப்ப

-மதுரை. 185

வயிரும் வளையுமார்ப்ப

முல்லை. 92

வயங்குகதிர் வயிரொடு வலம்புரி யார்ப்ப

-பதிற். 67:6

ஏங்குவயி ரிசைய கொடுவா யன்றி

லோங்கிரும் பெண்ணை யகமட வகவ

-குறிஞ்சி. 219.220

  • H. H. in oil is a m = * * * H H = தடந்தாள் நாரை செறிமடை வயிரின் பிளிற்றி

அகம். 40:14-15

கான மஞ்ஞைக் கமஞ்குன் மாப்பெடை

அரியான் றடைகன வயிரின் நானும் என்பன வற்றால் அக்காலத்தில் வயிர் என்னும் இசைக்கருவி இருந்தமையையும் அதில் இசை இசைக்கப்பட்டமையும் நன்கு தெளிவாகின்றன.

பாண்டில்

மிக அருகிக் காணப்படும் கஞ்சதாளம் நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்

-மலைபடு. 4 என மலைபடுகடாம் பாண்டிலைப் பற்றிப் பேசுகின்றது. சங்கு என்பதும் அக்காலத்திலிருந்த இசைக்கருவிகளுள் ஒன்றாம்.

இன்னணம் சங்க இலக்கியங்களின் மூலமும், தொல் காப்பியத்தின் மூலமும், சங்ககாலத்தில் இசை பெற்றிருந்த