பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 சங்க இலக்கியம்

எடுத்துப்பாடி மகிழ்தல் பழைய வழக்கம் என்பதைத் திருவாசகப் பாடல்கள் உணர்த்துகின்றன.

மாடுகளை மேய்த்து வந்த ஆனாய நாயனார் புல்லாங் குழலில் ஐந்தெழுத்துக்கள் ஓதி இறைவனை அடைந்தார் என்று பெரியபுராணம் பேசுகின்றது. திருநீலகண்ட யாழ்ப் பாணரும் திருப்பாணாழ்வாரும் யாழ்மீட்டியும் பாடியும் பேறு பெற்றனர் என்று நூல்கள் கூறுகின்றன.

சமயக்குரவர் பாக்கள் பல கொல்லி, இந்தளம், சீகா மரம், குறிஞ்சி, நட்டபாடை, வியாழக் குறிஞ்சி, செவ்வழி, புறநீர்மை, முதலிய தமிழ்ப்பண்களில் பாடப்பட்டுள்ளன.

திருநாவுக்கரசர் ஈசன் எந்தை இணையடி நீழல் மாசில்லாத வீணையொலி போன்றது என்று கூறுகின்றார். இதிலிருந்து அவரது இசைப்புலமையையும் இசை இன்பத் தில் ஆழ்ந்து கிடந்த நுட்ப உணர்வினையும் நாம் நன்கு அறியலாம். சைவ வைணவ சமயங்கள் பல்லவர் காலத்தில் மிகுதியாகப் பரவுதற்குரிய சிறந்த காரணங்களுள் இசைப் பாக்களும் ஒன்றாகும். பல்லவப் பெருநாட்டிலிருந்து பெருங் கோயில்களில் இசைவெள்ளம் கரைபுரண்டு ஓடியது என்பதைத் திருமுறைப் பாடல்கள் உணர்த்தி நிற்கின்றன.

பண்ணியல் பாடல் அறாத ஊர்

பத்திமைப் பாடல் அறாத ஊர்

பா இயல் பாடல் அறாத ஊர்

தையலார் பாட்டு ஒவாச்சாய்க்காடு

மாதர் மைந்தர் இசைபாடும் பூம்புகார்

பாலென வேமொழிங் தேத்தும் ஆவூர் இவற்றால் பெண்களும் ஆண்களும் இசையில் சிறந்திருந் தனர் என்பது தெளிவாகும்.

தேவாரம் குறிக்கும் இசைக்கருவிகள்

யாழ், குழல், கின்னரி, கொக்கரி, தக்கை, முழவம், மொந்தை, மிருதங்கம், மத்தளம், தமருகம், துந்துபி,