பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 19

சரக்குகளை அனுப்பினர். அ ர பி ய ர் செங்கடல் வாணிபத்தைத் தம் கைக்குள் கொண்டிருந்தனர்.

பாலத்தீனத்தை 8ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த சாலமனுக்கு மூன்று ஆண்டுகட்கு ஒருமுறை பல அரிய பொருட்கள் பரிசுகளாகக் கப்பலில் அனுப்பப்பட்டு வந்தன. ஹீப்ரு மொழியில் உள்ள துக்கிம் ஆம்மக் போன்றவை முறையே தமிழ்ச் சொற்களாய தோகை’, ’ அகில் என்பவற் றிலிருந்து தோன்றியிருத்தல் திண்ணம்.

சுமேரியத் தலைநகரான மூக்கியரிலிருந்து சந்திரன் கோவிலும் நெபுகத் நெஸார் மன்னனின் அரண்மனையிலும் மலபாரிலிருந்து சென்ற தேக்குக் கட்டைகள் காணப்படு கின்றன. இவை கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்து வாணிகம் நடந்திருக்கவேண்டும் என்பதை விளக்குகின்றன.

பாபிலோனியாவில் ஆடைகளைக் குறிக்கும் பட்டியல் ஒன்றில் சிந்து’ என்ற பெயர் காணப்படுகின்றது. வெண் து கிலைக் குறிக்கும் இச் சொல்லானது கன்னடத்திலும், துளுவிலும் வழங்கி வரும் சிந்தி என்ற பழைய திராவிடச் சொல்லிலிருந்து தோன்றியனவாய் இருக்கலாம். இது தென் னிந்தியாவோடு பாபிலோனியா நடத்திய வாணிகத்தைக் குறிக்கின்றது.

ஐரோப்பாவோடு தென்னிந்தியா ஏறத்தாழ கி. மு. 500 முதல் வாணிகம் தொடங்கியது உரோம வல்லரசர் அகஸ்டெஸின் காலத்தைச் சேர்ந்த ஸ்டிர போஸின் விவரணம் சுமார் கி. பி. 60 இல் தோன்றிய பெரிபுளுஸ் என்னும் நூல், பிளினியின் இயற்கை வரலாறு, தாலமியின் பூகோள விவரணம் (கி. பி. 150) என்னும் நூல்கள் கிறிஸ்து சகாப்தத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் நடைபெற்ற ஐரோப்பிய - தென்னிந்திய வாணிகத்தைப் பற்றி அறிவிக் கின்றன.

கி. மு. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி. பி. 6ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து நடைபெற்ற உரோம - யவன நாகரிகம்