பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 சங்க இலக்கியம்

மக்கள் நடுவில் தமிழிசைவாணர் தெலுங்குப் பாடல்களையே பாடி வந்தனர். ஒவ்வோர் இசையரங்கில் இறுதியில் மட்டும் இரண்டொரு தமிழ்ப்பாடல்களைப் பாடினர். தமிழ்ப் பற்றுடைய நம் மக்கள் இக் கேடான நிலைகண்டு மனம் வருந்தினர். செய்வகை அறியாது விழித்தனர். அந்த நிலை யில் செட்டி நாட்டரசர் இ ராசா. சர். அண்ணாமலை செட்டியார் தமிழிசையை வளர்க்க முற்பட்டார். அவருக்கு உதவியாக டாக்டர். ஆர். கே. சண்முகம் செட்டியாரும், சர். எம். ஏ. முத்தைய செட்டியாரும் நல்லறிஞர் பலரும் இருந்தனர். இவர்கள் முயற்சியில் தமிழகத்துப் பேரூர்களில் தமிழிசைச் சங்கங்கள் தோன்றின. தலைமைச் சங்கம் சென்னையில் நிறுவப்பட்டது. பலர் தொடக்கத்தில் தமிழிசை இயக்கத்தை வெறுத்தனர். அரசரும் பிறரும் மனம் தளராது தமிழிசையை வ ள ர் க் க த் தொடங்கவே முதலில் தோன் றிய வெறுப்பு ம ைற ந் த து . அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பல தமிழ்ப் பாடல்கள் நூல்கள் வடிவில் வெளிவந்தன. இன்றும் அவை வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொர் ஆண்டும் டிசம்பர் இறுதியில் சென்னையில் தமிழிசை மாநாடு நடை பெற்று வருகிறது. தமிழிசை வாணர் குழுவில் தமிழ்ப் பண்கள் ஆராயப்பட்டு வருகின்றன. சங்க நூல்களை நன்கு ஆய்ந்து பல யாழ்களைப் பற்றிய உண்மைகளை விபுலானந்த அடிகள் யாழ்நூல் என்னும் பெயரில் எழுதியுள்ளார். தமிழிசை பொதுமக்களின் ஆதரவைப் பெற்றுவிட்டதால் தெலுங்குப் பாடல்களையே பாடிக் கொண்டிருந்த இசைவாணரும் இப் பொழுது தமிழ்ப்பாடல்களைப் பாடி வருகின்றனர்.

தமிழ் மக்கள் நாடகக் கலையின் உயர்வை இப்பொழுது உணர்ந்து வருகின்றனர். சமயம் வரலாறு சீர்திருத்தம் இவற்றைத் தழுவிய நாடகங்கள் இன்று நடிக்கப் பெறுகின்றன. டி.கே.எஸ். சகோதரர்கள், சிவாஜிகணேசன், எம்.ஜி. ராமச்சந்திரன், கே. ஆர். இ ர ா ம ச | மி, எஸ். எஸ். இராசேந்திரன், தங்கவேலு, தேவி நாடக