பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ பார்வைகள் 225

_பயா, நவாப் இராசமாணிக்கம் முதலிய நாடகக் _லைஞர்கள் பலவகை நாடகங்களை நடித்துக் காட்டு பின்றனர். இவற்றில் எல்லாம் தமிழிசை முழக்கமிடுகிறது. தமிழ்ப்படக் காட்சிகள் மிகச் சிறந்த முறையில் இசைக் --|--|oss) || வளர்த்து வருகின்றன. காலத்திற்கேற்ற கருத்தமைந்த பாடல்கள் கேட்டு மகிழ்தற்குரியன.

கட்சிப் பாடல்கள்

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் சமுதாய நலக் _சிகளும் தத்தம் கொள்கைக்ட்கேற்பப் பாடல்களைக் அட்சிக் கூட்டங்களில் பாடின. அப் பாட்டுக்களின் வாயிலாக அவர்தம் கொள்கைகளைப் பரப்பினர். பாரதியார் பாடல் _ளைத் தெருக்களில் பாடியது காங்கிரஸ் கட்சி மிகச் செல்வாக்குப் பெற்றதற்குக் காரணமாம்.

பொதுவாகச் சென்னை வானொலி நிலையத்திலும் சிறப்பாகத் திருச்சி வானொலியிலும் நாள்தோறும் தமிழிசை பரப்பப்பட்டு வருகின்றன. மேனாட்டு இசையிலும், கர்நாடக இசையிலும், தமிழிசையிலும், அரபுநாட்டிசையிலும் தமிழ்ப்பாக்கள் உருவாகிக் கொண்டே வருகின்றன. இந்த வளர்ச்சி வரவேற்கத்தக்கது.

முடிப்புரை

பண்டைக்காலத்தில் இசை மக்களுக்குரிய ஒன்றாக இருந்தது. பின்னர் இடைக்காலத்தில் அது மன்னர்க்குரிய கலையாக நிலக்கிழார்களின் கலையாகப் போற்றப்பட்டது. முதலில் இருந்தது தமிழிசை. பின்னர் வடமொழியாளர் இசைத் தமிழில் கலந்தது. விசய நகர ஆட்சியின் விளைவால் கர்நாடக இசை கால் கொண்டது. முகம்மதிய ஆட்சியில் இந்துஸ்தானி நுழைந்தது. பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியால் மேனாட்டு இசை பரவியது. ஆட்சி மாறுபட்டால் சமுதாயத் துறைகள் பலவற்றிலும் மாறுதல் ஏற்படுவது போலவே கலைத்துறையிலும் மாறுதல்கள் ஏற்படுவது இயற்கையே அன்றோ!