பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 சங்க இலக்கியம்

மையின் கொடுமைகளைக் கூறி அதன் வழி உறக்கத்தின் உயர்வை வலியுறுத்துகிறார்.

யார் அணங் குற்றனை கடலே பூழியர்

சிறு தலை வெள்ளைத் தோடு பரந்தன்ன

மீனார் குருகின் காணலம் பெருந்துறை

வெள்வித் தாழை திரையலை

நள்ளென் கங்குலம் கேட்கும் கின் குரலே (163:15) என்பது பாடல். மற்றும் ஒரு புலவர் (கூவன் மைந்தன், குறுந். 224) உளவியல் பகுப்பாய்வாளர்கள் (psychoanalysts) ஆய்ந்து கண்டுபிடித்த துஞ்சா நோயினை (Insomnia) அவர்கள் கருதிய போக்கிலேயே உரைத்திருக் கிறார்.

கவலை யாத்த அவல நீளிடைச்

சென்றோர் கொடுமை எற்றி துஞ்சா

நோயினும் நோய் ஆகின்றே என்றார். உளவியல், உள மருத்துவம், இலக்கியம், சமூக வியல், தத்துவம் ஆகிய துறைகளில் மேலைநாட்டவர் களுக்கு இந்தியர்கள் தான் வழிகாட்டியாக இருக்க முடியும் என்று பூதான இயக்கத்தின் தந்தை வினோபாபாவே உரைத் தமை இவண் நினைத்துப் பார்த்தற்குரியது.

மருத்துவத்தின் தந்தையாகக் கிரேக்க நாட்டறிஞர் இப்போகிரேடஸ் கருதப்படுகிறார். அவர் உடலமைப்பினை நான்கு வகையாகப் பிரித்திருக்கிறார். எல்லா வகையாலும் சிறந்த உடலினையே தூய உடம்பு என்கிறார். இதனைப் “புனித நோய்’ (Sacred Disease) எனும் அவர்தம் நூலில் காணலாம். பாலை பாடிய பெருங்கடுங்கோ அவர்கள் இப்போ கிரேடஸ் கூறிய கருத்தினைத் திருந்திய யாக்கை’ என்றே குறிப்பிடுகிறார். மனித யாக்கை செப்பமூறுவதற்கு அடிப்படையானவை சோறும் தண்ணிருமே. எனவே இவ் விரண்டையும் இரு மருந்து என்ற சொல்லால்