பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A_ பார்வைகள் 229

ாக வர் கிழார் குறித்தமை மருத்துவ அறிஞர்தம் ஆய்விற்கு கயிருந்தாய் அமையும்.

பாலை எனும் ஒருவகை குறுகிய காலத் தோலின் | மாறுபட்டு நோயினைப் புலவர்கள் குறித்திருக்கிறார் க. இது பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோயாகவும் - ரைத்திருக்கிறார்கள். நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் பாக வளர்ச்சிக்கு உதவும் நீர்களின் வேதியியல் வினை நிகழ்வால் ஏற்படும் மாறுபாடாக இருக்கலாம் என்று பெண் மருத்துவ அறிஞர்கள் (Gynaecologists) கருதுகின்றனர். டி ட.லில் குருதியோட்டத்தின் அளவில் சிறிது குறைந்தால் நான் தோலின் நிறம் மாறுபடும் என்று மனிதத் தோலியல் வல்லுநர்கள் கருத்துத்தெரிவிக்கின்றனர். இதனைக் குருதிக் குறைபாட்டு நோய் அல்லது ரத்த சோகை (Anaemia) என்று அழைக்கலாம். இதில் பல வகை உண்டு. எனவே சங்ககால மக்களுக்கு இந்த நோயைப் பற்றிய நுட்பமான அறிவு இருந்ததோடு அதனைப் பற்றி இன்றைய அறிவியல் அறிஞர்கள் முழுநேர ஆய்வு நிகழ்த்தவும் குறிப்புகளை விடுத்துச் சென்றுள்ளனர்.

H H H H H H H = H அலர் வாய் அயலிற் பெண்டிர் பசலை பாட ஈங்கா கின்றால் தோழி

-நற்றிணை 378:6.8

நோய்தந் தனனே தோழி பசலை ஆர்ந்த நம்குவளையம் கண்ணே

-குறுந்தொகை 13 : 4.5

பிற மேற்கோளைகளையும் இந் நோக்கில் ஆய்ந்தால் பல நுட்பங்கள் புலப்படும்.

கருவுற்ற பெண்கள்

கருவுற்ற பெண்களின் வயிற்றில் ஐதுமயிர் (பொருநர் ஆற்றுப்படை6-7)என்ற ஒருவகை முடிகானபடும் என்றனர்.