பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 சங்க இலக்கியம்

(7) இருளும் உண்டோ ஞாயிறு சினவின்

-புறநானூறு 90:0

(8) உருகெழு ஞாயிற்று ஒண் கதிர்

-புறநானூறு 160:1

(9) இருள்கண் கெடுத்த பருதி ஞாயிறு

-புறநானூறு 174: ஆகிய மேற்கோள்களின்வழி ஞாயிற்றின் அளவற்ற ஆற்றலை அறிஞர்கள் உணர்த்தியிருக்கின்றனர்.

கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற

வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே எனும் தொல்காப்பிய நூற்பாவினை அறிவியலார் பார்வைக் குக் கொண்டு வந்தால் தமிழன் அறிவியல் நோக்கில் முதலடி எடுத்து வைத்தவன் என்பது புலப்படும்.

கதிரவன் ஓரிடத்தில் இல்லாமல் சுழன்று கொண்.ே திரியும் ஒரு கோள் என்று அறிந்திருந்தனர். ‘மாறிவருதி’ என்ற கபிலரின் சொல்லாட்சியும், “வானம் ஊர்ந்த வயங் கொளி மண்டிலம்’ என்ற ஒளவையாரின் வெளிப்பாடும், ‘செஞ்ஞாயிற்றுச் செலவு” என்ற உறையூர் முதுகண்ணன் சாத்தனார் கூற்றும் நினைத்துப் பார்க்கத்தக்கவை.

Gouéluoluéb sGāglésir (Thoughts on chemistry)

மிகமிக அண்மைக் காலத்தில்தான் வேதியியல் என்பது முழுமையான அறிவியலாக உருப்பெற்றது என்பர். தமிழ் மொழியிலும் இயற்கையிறந்த நிகழ்வுகளைச் சுட்டாக பதினெண் சித்தர் பாடல்கள் சிலவற்றில் வேதியியல் கருத்துக்கள் பதிந்து காணப்படுவதாகக் கொள்ளலாம். கரியும் தண்ணிரும் சேர்ந்த கூட்டுப்பொருள்தான் மனிதன் orórðpg. 3 ouá’uouá (Human body is a Complox Compound of Carbon, Hydrogen and Oxygen) flasfacil