பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 சங்க இலக்கியம்

பெறுகின்றன. ஒன்று மற்றதின் இரையாக இருந்து உணவுச் சங்கிலித் தொடர் ஏற்பட்டு அது பலவகையாகப் பின்னிப் பிணைந்து சிலந்தி வலைபோன்ற அமைப்பினைப் பெறு கின்றன என்பதும் அறிஞர்களின் கருத்தாகும்.

“கோழிலை வாழை கோள்முதிர் பெருங்குலை’ எனத் தொடங்கும் அகநானூற்றுப் பாடலில் குரங்கின் உணவாக வாழை, பலா, தேன் ஆகியன சுட்டப்பட்டு ஒருவகை உணவுச் ச ங் கி லி (Food chain) குறிக்கப்படுகிறது. இத்தகைய குரங்கு, தன்னை உணவாகக் கொள்ளும் விலங்காகிய மடங்கலைக் கண்டு .ெ வ ரு வி ய த க நற்றிணைப் புலவர் பொதும்பில் கிழார் கூறியுள்ளார்.

தடங்கோட்டு ஆமான் மடங்கல் மாநிலைக் குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென துஞ்சுபதம்பெற்ற துய்த்தலை மந்தி

............மருட்கை உடைத்தே

-நற்றிணை. 57: 1.7 என்பன அப்பாடல் அடிகளாம்.

இதே போன்று, கணம் கொள்சேவல் நள்ளிருள் யாமத் தில் இல்எலி பார்த்திருக்கும் நேரத்தில் பிள்ளை வெருகிற்கு இரையாயிற்று எனத் தொடர்நிலை உணவுச் சங்கிலி பற்றிப் பேசுகின்றார் மதுரைக்கண்ணனார் (குறுந். 107: 1-4). அகம். 3, 8, 29, 112, 193 ஆகிய பாடல்களில் பல்வேறு உணவுத் தொடர்கள் குறிக்கப்பட்டுள்ளன. “கோம்பிக்கு ஒதுங்கிய மேயா மஞ்ஞை’ என்ற திருக்கோவையாரும் கருதத்தக்கது.

மனிதன் தான், சுற்றுச் சூழல் பின்னணியை மாற்றி யமைத்துச் சமன்பாட்டை முரணும்படியாகச் செய்கிறான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். முக்கோண அமைப்புள்ள சுற்றுப்புறச் சூழலைக் கூம்பு வடிவ நிலைக்கு மாற்றி இயற்கையின் போக்கில் மாறுதலை ஏற்படுத்து