பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 சங்க இலக்கியம்

இயற்கைத் தேய்வு (Weathering) பற்றி மேற்கோள்கள் பல உள்ளன. கூதிர்க் காலத்தில் வீசும் வாடைக்காற்று, குன்றினையும் குளிர்விக்கச் செய்து அதன் ஆற்றலைக் குறைக்கும் என்றார் நக்கீரனார் (நெடுநல்வாடை 12). கதிரவனின் வெம்மையால் மலை வெம்பி வெடித்து மண் துகளைத் தரும் என்றார் பாலை பாடிய பெருங்கடுங்கோ (பாலைக்கலி 12:.1.5), 19:2-6) மண்துகள்களிடையே நெருக்கம் இருப்பதால்தான் நிலம் உறுதிப்படுகிறது என்கிறார் முரஞ்சியூர் முடிநாகராயர். இவ் வுலகையே மண்ணகம் என்று இரும்பிடர்த்தலையார் அழைக்கும் பாங்கும் நோக்குதற்குரியது (புறம். 3:2).

ஒரு நாட்டின் மேடு, பள்ளம், மலை, கடல், ஆறு ஆகியனவற்றைப் பற்றி ஆராயும் இயல் நில அமைவியல் ஆகும் (Topography). இந் நாட்டின் அமைவியலைப் படம் பிடித்துக் காட்டுபவர்போல் காரி கிழார் புறநானூற்றில் பாடலொன்றைத் தொடங்கியிருப்பது இந்திய வரைபட ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தும்.

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

தெனா அது உருகெழு குமரியின் தெற்கும்

குணா.அது கரைபொரு தொடுகடற் குணக்கும்

குடா அது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும் என்னும் பாடலடிகள் தமிழகத்தின் நில அமைப்பினை நன்கு எடுத்துக்காட்டும். நில அமைப்பியல் வேறு, புவியியல் (Geography) (361son.

மலையிலிருந்து விழும் அருவி படிபோல் அமைந்து மலையைத் துளைப்பதோடு (Cascading) ஒரிடத்திலிருந்து ஒரு பொருளை எவ்வாறு மற்றோர் இடத்திற்குக் கொண்டு சேர்க்கிறது (Transportation) 6T 6ör L. 6» 3 BảáËT ř3th திருமுருகாற்றுப்படை அடிகளால் அறியலாம்.