பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 சங்க இலக்கியம்

செயல்களாக வருணிக்கப்படுபவையெல்லாம் மண்ணியல் அறிமுகப்பாடங்களில் இடம் பெற வேண்டிய விழுமிய செய்தி களாம்.

Gibgpsstlusd (Criminology)

எது குற்றம் என்று வரையறை செய்ததோடு அதனைக் கண்டுபிடிக்கும் முறைகளையும் சா ன் ேற ார் க ள் கோடிட்டுக் காட்டினர்.

ஆன்முலை அறுத்த அறனில் லோர்க்கும் மானிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் வழுவாய் மருங்கில் கழுவாயும் உளளன

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்

-புறநானூறு 34:1-6 என்பன, குற்றவியல் அறிஞர் தத் (Dutt.) அவர்களின் கருத் துக்களோடு இணைந்து செல்வன. ஆட்கொலையைத் (Honicide) தொல்காப்பியர், உறுப்பறையினுள்ளும் அறிவுக்கொலையை (Brainwash) தீக் கொலையினுள்ளும் குறிப்பிட்டார். உள்நோக்கம் (Motive) இதனுள் அடங்கும். எனவே கொலைகளில் உணர்வு மேலிட்டுக் கொலை திட்ட மிட்டுச் செய்யப்படும் கொலை (Alleged Murder) என இரு வகைப்படும் என்பதும் இன்று குற்றவியல் அறிஞர்கள் கூறும் நுண்ணிய பாகுபாட்டைத் தொல்காப்பியர் அன்றே கூறியமை பாராட்டற்குரியது.

நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும்

அறிபவர் கெஞ்சத்துக் குறுகிய கரிஇல்லை என்பது மனச்சாட்சியின் மாண்பினை எடுத்துரைக்கின்றது. குற்றவியலுக்கு அடிப்படையான மனச்சாட்சியைச் (Consci ousness) சங்க இலக்கியம் நன்கு இயம்பியுள்ளது, ‘அறிகரி