பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 323

மக்களுமே என்பதை ரைஸ்லி அவர்களின் கூற்று உணர்த்து கின்றது.

மங்கோலியரா?

தமிழருடைய வரலாற்றை முதன்முதல் முறையாக ஆங்கிலத்தில் எழுதிய தமிழறிஞர் திரு. வி. கனகசபைப் பிள்ளை. தமிழர் திபெத்திலிருந்து தென்னிந்தியாவிற்கு வந்தேறிய மங்கோலிய இனத்தைச் சார்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

தென்னாட்டின் பழங்குடி மக்களான வில்லவர் மீனவர் முதலானவர்களை நடு ஆசியாவிலிருந்து வந்த நாகர்கள் என்னும் கூட்டத்தார் வென்று அவர்களைக் காடுகளுக்கும் மலைகளுக்கும் விரட்டினர். அதன் பிறகு திபெத்திலிருந்து வந்த மங்கோலிய இனத்தைச் சேர்ந்த தமிழர் நாகர்களை வென்று அடக்கினர் என்பது அவருடைய நம்பிக்கையாகும். தமிழர் நான்கு பிரிவாகத் தென்னாட்டில் நுழைந்தனராம். மாறர் என்ற கூட்டத்தினர் முதன்முதல் தமிழகத்திற்கு வந்து பாண்டிய நாட்டில் தங்கினர் என்றும், அதன் பிறகு வந்த திரையக’ என்பார் சோழர் வாழ வசதி செய்து கொண்டனர் என்றும், மூன்றாவதாக வந்த ‘வானவர்” என்ற குழுவினர் சேரநாட்டைத் தமதாக்கிக் கொண்டார் என்றும் இம்மூவருக்கும் பின்னர் வந்த கோசர் என்னும் கூட்டத் தார் கொங்கு நாட்டைத் தங்களாட்சிக்குட் படுத்திக் கொண்டனர் என்றும் திரு. வி. கனகசபைப் பிள்ளை விளக்கியுள்ளார்.

திராவிடருடைய உடற்கூறு மங்கோலியருடைய உடற் கூற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளமை இங்குச் சிந்தித்தற்குரியது. இவை அல்லாமல் சமூகப் பழக்க வழக்கங்களும் பண்பாட்டு நெறிகளும் இவ்விரு மக்களினத் தவரிடையே தொடர்பற்றுக் காணப்படுகின்றன. தமிழர் மங்கோலிய இனத்தைச் சார்ந்தவர் என்னும் கருத்து

மக்களின் இனமரபு வரலாற்றிற்கு முரண்படுகிறது.