பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சங்க இலக்கியம்

தமிழகத்தின் தொல்குடி மக்களா?

வரலாற்றாசிரியர்கள் சிலர் திராவிடர் அயல்நாட்டி விருந்து வந்தவர் அல்லர். இந் நாட்டு மண்ணில் தோன்றிய முதல் பழங்குடி மக்களின் வழித் தோன்றல்களே என்பதைச் சான்றுகள் பல தந்து நிறுவியுள்ளனர்.

பி.தி. சீனிவாச ஐயங்கார் மனிதன் தென்னிந்தியாவின் நடுப்பகுதியில்தான் தோன்றியிருக்கவேண்டும் என்று அறுதி யிட்டுக் கூறியுள்ளார், புதுக்கற்கால மக்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி ஒன்றையே (பெரும்பாலும் தமிழை) பேசியிருக்க வேண்டும் என்று மொழிந்துள்ளார்.

திரு. சு. வே. வெங்கடேஸ்வரன் என்னும் அறிஞர் திராவிடர் இந்தியாவிற்குள் வெளிநாட்டிலிருந்து வந்து நுழைந்தவர்கள் அல்லர் என்றும் திராவிட நாகரிகப் பண்பாடு இந் நாட்டு மண்ணிலேயே முளைத்து எழுந்து தழைத்து வளர்ந்து பல விழுதுகள் விட்டு முதிர்ந்த பேராலமரம் என்பதைக் கடந்த ஊழிகளில் இந்தியப் பண்பாடு என்னும் நூலில் விளக்கியுள்ளார்.

இவ்விருவர் கூற்றினையும் ஏற்றுக்கொண்ட பேராசிரியர் இராமச்சந்திர தீட்சிதர், குமரிக் கண்டமே திராவிடரின் மூலத் தாயகம் என்றும், திராவிடப் பண்புகள் இந்திய நாகரிகத்தில் மட்டும் காணப்படுவது அல்ல என்றும், சிறந்த நாகரிகம் உற்றிருந்த கிரீக், சுமேரியா, பாபிலோனியா, பொலிசீனியா ஆகிய நாடுகளிலும், மற்றும் பண்டை உலக நாகரிகங்கள் பலவற்றிலும் பெரும்பாலும் திராவிடப் பண்பாட்டின் கூறுகளைக் காணலாம் எனவும் பகன்றுள்ளார்.

எகிப்திலிருந்து வந்தவர்

“எலியட் ஸ்மித்’ என்பார் திராவிடரை எகிப்தினின்றும்

இந்தியா விற்குள் வந்தவர்கள் என்று கூறிப்போந்தார். இக்

கருத்தினை நிலைநாட்ட கார்னிலியசு அரும்பாடுகின்றார்.