பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 25

திராவிடர்கள் நடு ஆசியாவிலிருந்து வந்த சித்தியர்கள் என்று கால்டுவெல் கருதினார்.

மற்றும் பலர் திராவிடர் மேற்காசியப் பகுதியில் தோன்றியவர் என்னும் கருத்தினை வலியுறுத்துகின்றனர்.

பலுசிஸ்தானத்தில் வழங்கும் பிராகுயி மொழிக்கும் திராவிட மொழிக்கும் உள்ள ஒற்றுமையைக் காரணம் காட்டித் திராவிடர்கள் பலுசிஸ்தானத்தின் வ ழி யா க இந்தியாவில் நுழைந்தனர் எனவும் நம்புகின்றனர்.

டாக்டர் ஆல் என்ற அறிஞர் சுமேரியருக்கும் திராவிட ருக்கும் உள்ள உடற்கூறு ஒற்றுமையைக் கொண்டு சுமேரியர் என்பார் திராவிட இனத்தைச் சார்ந்தவர் என்றும் அவர்கள் இந்தியாவிலிருந்து பாரசிகத்தின் வழியாக டைக்ரிஸ், யூப்ரடீஸ் ஆறுகள் பாயும் சமவெளிக்குச் சென்று குடியேறிய வர் என்றும் குறிப்பர். இதனைச் சிலர் மறுப்பர்.

நடுநிலக்கடல் இனத்தினர்

இந்தியாவிற்கும் பாபிலோனியாவிற்கும் இடையே பண்டைக்காலத்தில் நிகழ்ந்த வணிகத்தைப்பற்றி ஆய்வு நடத்திய கென்னடி என்பார் திராவிடருக்கும் நடுநிலக்கடல் இனத்து மக்களுக்கும் இடையே காணப்படும் ஒப்புமைப் பண்புகளையும் தொடர்பினையும் சு. ட் டி க் காட் டி த் திராவிடர்கள் நடுநிலக்கடல் பகுதியிலிருந்து இந்தியாவிற்கு வந்திருக்கவேண்டும் என்கின்றார்.

எய்மெண்டார்ஃப் கருத்து

தென்னிந்தியாவில் இரும்புக்கால நாகரிகத்தைத் தமிழகத்தில் வெளிநாட்டினின்று கொணர்ந்து புகுத்திய வர்கள் திராவிடர்களே. சற்றேறக் குறைய கி.மு. ஐந்தாம் நூற்றாண்டளவில் நடு ஈரானிலிருந்து திராவிடர்கள் தென்னிந்தியாவிற்கு இரும்புக்கால நாகரிகத்தைக் கொண்டு வந்து புகுத்தியிருத்தல் வேண்டும். அண்மைக் காலத்தில்

சங்-2