பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 29

ஹீராஸ் பாதிரியார் குமரிக்கண்டத்தில் தோன்றிய மக்கள் பலவகை மக்களாக வாழ நேரிட்டது என்பதைக் குறிக்கின்றார்.

லெமூரியா என்று கூறப்படும் அந் நிலப்பரப்பே குமரிக் கண்டம் என்று தமிழிலக்கியத்தால் அறியப்படும் பகுதியாகும். அங்கே குமரிமலை என்ற பெருமலை இருந்தது என்றும், பஃறுளியாறு என்னும் ஆறு ஓடியது என்றும், பழந்தமிழ்ப் பாட்டுகள் அறிவிக்கின்றன. அந்த மலையும் ஆறும் இருந்த பழங்காலம் இமயமலையும் கங்கையும் தோன்றாமல் இருந்த காலமாகும். அத்தகைய குமரிக்கண்டத்தில் முதன் முதலில் தமிழ்மக்கள் தோன்றினர் என்றும், அவர்கள் பேசிய மொழியே மூலத் திராவிட மொழி என்றும் ஆராய்ச்சியாளர் பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். குமரிக் கண்டத்தில் அரும்பிய நாகரிகமே மலர்ந்தது என்றும், மொகஞ்சதரோவில் வளர்ந்த பழந்தமிழர் நாகரிகமே நடுநிலக்கடலை அடுத்த பகுதிகளில் எகிப்து நாகரிகம், கிரேக்க நாகரிகம், பாபிலோனிய நாகரிகம். பொனிசீய நாகரிகம் முதலியன வளரக் காரணமாக இருந்தன என்றும் கருத இடமுள்ளமை ஆராய்ச்சியாளர்கள் நினைவு கூரத்தக்கனவாகும்.

_

1. We are therefore forced to acknowledge that the Dravidians of india, after a long period of developmont in this country, travelled westwords of settling success - fully in the Various lands’ they found this way from Mesapatomia up to the British isles, spread their race afterwards named Mediterranean owing to the place where they were known anthropologically - through the west and made their civilization flourish in two contineous being thus organations of the modern world Civilization.

–REV. St. HERAS Studies in Proto-Indo Mediteranean Culture, P. 21.