பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சங்க இலக்கியம்

திராவிடர் பண்பாடு

ஆரியர் வருகைக்கு முன்பே திராவிடர் நாகரிகத்தில் சிறந்து விளங்கினர். திராவிடருடைய பண்பாட்டை டாக்டர் கால்டுவெல் சுருக்கமாகவும் தெளிவாகவும் நூறு ஆண்டுகட்கு முன்னரே வரைந்துள்ளார்.

திராவிடர்கள் வாழ்க்கை முறை செம்மைப்பட்ட திருந்திய ஒன்றாக அமைந்திருக்கிறது. அரசியல் வாழ்வும், சமய வாழ்வும், இவர்களிடத்தில் சிறந்த முறையில் அமைந் திருக்கின்றது. இந்திய நாகரிகத்தையும் பண்பாட்டையும் முழுநிறைவுடையதாக்கிப் .ெ ப ா லி ய ச் செய்தவர்கள் திராவிடர்களே யாவர். இன்றைய இந்தியப் பண்பாட்டில் நூற்றுக்கு எழுபத்தைந்து விழுக்காடு ஆரியர் ஆரியர் அல்லாதாரின் பண்புகளே சிறப்புற்று விளங்குகின்றன என்பது டாக்டர் எஸ்.கே. சட்டர்ஜியின் கருத்தாகும். இவ் வெழுபத்தைந்து விழுக்காட்டில் அறுபத்தைந்து விழுக் காடு திராவிடருடைய பண்பாட்டுக் கூறுகளாக உள்ளன என்று கூறினால் அது மிகையாகாது.

மேற்கூறியவற்றால் தமிழ் இன மரபின் தொன்மையை யும் சிறப்பையையும் நன்கு தெளியலாம்.

እ$ <ూ