பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும்

உலகில் பல மொழிகள் தோன்றி வழங்கி மறைந்து ஒசிந்தன. ஒருசில மொழிகள் மட்டும் கால வெள்ளத்தில் அழியாமல் நிலைத்து நிற்கின்றன. அவ்வாறு நிலைத்துள்ள மொழிகளிலும் சில பேச்சு வழக்கு இழந்து இலக்கிய மொசி யாக மட்டுமே உள்ளன. அவற்றின் இடத்தில் வேறுசில பல புதிய மொழிகள் தோன்றி வாழ்ந்து வருகின்றன. இவ்வாறு தோன்றி வளர்ந்து மாயும் மொழிகளுக்கு இடையே மிகப் பழங்காலத்திலேயே தோன்றி செல்வாக்குடன் வளர்ந்து இன்றளவும் வாழ்ந்து விளங்குவன தமிழ் சீனம் முதலிய மொழிகளே. இவற்றுள்ளும் பழமைக்கும் பழைமையாய் இலக்கிய வளம் உடையதாய் நிற்பதோடு, புதுமைக்கும் புதுமையாய்க் கருத்துச் செல்வம் நிறைந்ததாய் என்றும் இளமைப் பொலிவுடன் விளங்குவது தமிழ் மொழியாகும். ஆதலின் தமிழ்மொழி பெருமைமிக்க பழைய வரலாறு உடையதாகும்”.

திராவிட மொழிகளுள் மிகத் தொன்மையானதாகக் கருதப்படுவது தமிழ்.

1. In the most ancient layers of the Tamil Language can be discovered not only ample trace of Neelithic Culture but also the birth of the iron age culture which succee-ded in

—V.R.R. DIKSHITAR, Pre-historic South India, P.179.